Header Ads



மாணவர்களுக்கு இனிமேல், சீருடைக்கான வவுச்சர் வழங்கப்படாது - மகிந்த பிரகடனம்

பாடசாலை மாணவர்களுக்கு சீருடை வழங்கும் நடைமுறையில் மீளவும் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரியவருகிறது.

பாடசாலை மாணவ மாணவியருக்கான இலவச சீருடை வழங்கும் வகையில் கல்வி அமைச்சு சீருடைக்கான வவுச்சர்களை வழங்கி வந்தது.

எனினும், பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் இந்த வவுச்சர் முறையை ரத்து செய்ய தீர்மானித்துள்ளது.

பழைய முறையில் நேரடியாக மாணவ மாணவியருக்கு சீருடைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி மற்றும் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் பாடசாலை மாணவ மாணவியருக்கு சீருடைகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2 comments:

  1. அவ்வாறு கொள்வனவு செய்வதன் மூலமாக எத்தனை கோடி கமிஷன் அடிக்கலாம் என இனி கணக்குப் பார்த்து பேரம் பேசி முடிவாயிற்று.

    ReplyDelete
  2. Yes sir we are waiting for you

    ReplyDelete

Powered by Blogger.