Header Ads



சம்பிக்க மீது, அடிவிழுவதை தடுத்த மகிந்த ராஜபக்ஷ

மஹிந்தவுடன் காரசாரமாக உரையாடிய சம்பிக்க ரணவக்க எம்.பி.யை அரச தரப்பின் எம்.பி.யான லோஹான் ரத்வத்த நெஞ்சில் பிடித்து தள்ளிய சம்பவம் ஒன்று இன்றைய -15- பாராளுமன்ற அமர்வில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இன்றைய அமர்வில் ஏற்பட்ட அமளிதுமளியின்போது சபாநாயகரை அரச தரப்பினர்  தாக்க முற்பட்டுக்கொண்டிருந்த நிலையில் அது தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவுடன் அவரது ஆசனத்துக்கு அருகில் சென்று ஐக்கிய தேசியக் கட்சியின் சம்பிக்க ரணவக்க எம்.பி காரசாரமாக பேசிக்கொண்டு இருந்த போது குறுக்கே வந்த அரச தரப்பின் லோஹான் ரத்வத்த எம்.பி சம்பிக்க ரணவக்கவை நெஞ்சில் பிடித்து தள்ளியதுடன் வரை தாக்கவும் முற்பட்டார். 

எனினும் குறுக்கிட்டு தடுத்த மஹிந்த ராஜபக்ஷ ரோஹான் ரத்வதவை அகன்று செல்லுமாறு குறிப்பிட்டு சம்பிக்கவை தன்னருகே அழைத்து கைலாகு கொடுத்து தோளில்  தட்டி சமாதானப்படுத்தினார். 

No comments

Powered by Blogger.