Header Ads



"ஞானசாரரின் வேதனை" - இறைவனிடம் மாத்திரமே, தெரிவிக்க முடியுமென்கிறார்

அப்பட்டமான குற்றச்சாட்டின் கீழ் தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை சரி செய்வது யார்? எங்கே சரி செய்வது?  என கேள்வியெழுப்பியுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இப்போது அதைப் பற்றி கடவுளிடம் மாத்திரம் தான் தெரிவிக்க முடியுமென தெரிவித்துள்ளார்.

இன்று-26- வழக்கொன்றில் ஆஜராவதற்காக, ஹோமாகம நீதவான் நீதிமன்றத்துக்கு சிறைச்சாலை பஸ் மூலம் வருகைத் தந்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு தெற்கு அதிவேக வீதியின் கொட்டாவ நுழைவாயில் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி மற்றும் அதிவேக வீதியின் பணியாளர்களின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஞானசார தேரர் நடந்துக்கொண்ட குற்றச்சாட்டின் கீழ் ஹோமாகம நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு விசாரணையில் முன்னிலையாவதற்காக தேரர் இன்று வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து ஹோமகம நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.

4 comments:

  1. இந்த பூமியில் ஆட்டம் போற்றவர்கள் எத்தனையோபேர்.ஆடுபவனுக்கு தெரியுதோ இல்லையோ ஆட்டிவிப்பவனுக்கு தெரியும் ஒரு நாள் எல்லாம் அடங்கிவிடுமென.

    ReplyDelete
  2. அப்போ பௌத்த துறவியான நீங்கள் முன்பு இறைவனை நம்பவில்லையா.?

    உங்களுக்கு பிரச்சினை வரும் போது மட்டும் தான இறைவனை நம்புவது. உங்களிடம் தில் இருக்கும் போது என்ன ஆட்டம் போட்டீங்க....

    ReplyDelete
  3. 😆😆😆 இப்ப நீங்க கடவுளிடம் போய் கொம்ப்லைன் பண்ணுக 😆😆😆

    ReplyDelete
  4. This Terror MONK getting Mad now. What GOD is he talking about..???.
    There is no GOD (Listen to this Terror Monk's old speech’s).
    Now he is On Search of GOD.
    Better now this trouble making MONK respect all other religions and Study and accept a religion and existence of GOD.. Real GOD.

    ReplyDelete

Powered by Blogger.