Header Ads



இலங்கைக்குள் புகுந்தது ஐ.நா. - அடுத்து என்ன நடக்கும்..?

இலங்கையில் அரசியல் நெருக்கடியொன்று ஏற்பட்டுள்ள பரபரப்பான தற்போதைய சூழ்நிலையில் அது குறித்து ஆராய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகார திணைக்களத்தின் ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான பணிப்பாளர் மரி யமஷிட்டா அமெரிக்காவிலிருந்து கொழும்பு வந்திருப்பதாக உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

கொழும்பில் தங்கியிருக்கும் காலத்தில் ஜனாதிபதி மற்றும் இதர அரசியல் தலைவர்களை சந்திக்கவுள்ள அவர் தற்போதைய அரசியல் நெருக்கடி குறித்தும் அரசியல் பதற்ற நிலையை தணிப்பது பற்றியும் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

நேபாளம் ,ஜப்பான் குரோஷியா ,அர்மேனியா உட்பட்ட நாடுகளில் ஐக்கிய நாடுகள் சபையின் உயர்பதவிகளை வகித்த இவர் அரசியல் நெருக்கடிகள் தொடர்பான விடயங்களை கையாள்வதில் தேர்ச்சி பெற்றவர் என்பதால் இலங்கை விடயத்தை நேரடியாகவே கையாள ஐ நா பொதுச் செயலாளரால் அனுப்பப்பட்டிருக்கக் கூடுமென பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த இராஜதந்திரி ஒருவர் தெரிவித்தார்..

ஐ நா வே நேரடியாக தலையிட்டிருப்பதால் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் அடுத்து என்ன நடக்கும் என்பது பற்றி பரபரப்பாக பேசப்படுகிறது..!

-Ramasamy-

4 comments:

  1. எதுவும் நடக்காது

    ReplyDelete
  2. Welcome.. But Don't try to create new terrorism in our country and leave.
    We don't believe 70% UNO... Can you justify what did you do to Burma Terrorism... Useless and dangerous UNO.

    ReplyDelete
  3. 1987ல் இந்தியா வடகிழக்கில் த்ரை இறங்கியபோது அம்பாந்தோட்டையில் சீனா இறங்கியபோதெ வெளியார் தலையீடு ஆரம்பமாயிற்று. இது என் எரியா. எது செய்வதானாலும் என் அனும்தி வெண்டும் என பிரபாகரன் இந்தியாவோடும் பின்னர் சமாதான பேச்சுவார்த்தையின்போது மேற்கு நாடுகளோடும் நிமிராமல் இருந்திருந்தால் இன்று நிலமையே வேறாக இருந்திருக்கும். பிரபாகரன் இல்லாத புலிகள் அல்லது பிரபாகரனில்லாத வடகிழக்கு என இந்தியாவும் மெற்க்கும் முடிவெடுத்ததானால் மட்டுமே போர் முடிவுக்கு கொண்டுவரபட்டது. இன்று மீண்டும் வடகிழக்கு மண்டிலம் மேற்கு காரையோர மண்டிலம் இடைபட்ட சிங்கள பெளத்த மண்டிலமென மேற்குலகு பெருந்தோட்ட மலையக மண்டிலமென மேற்குலக இந்தியா சீன செல்வாக்கு மண்டிலங்களாக இலங்கை பிழவுபட ஆரம்பித்துள்ளது. மகிந்த ரணில் சம்பந்தருக்கும் மலையக தலைவர்களுக்கும் தங்கள் தங்கள் செல்வாக்கு மண்டலங்கள் தெரியும். மேற்டி மாறுபட்ட செல்வாக்கு மண்டிலங்களுள் யாவற்றுக்குள்ளும் பிழவு பட்டு சிதறியிருக்கும் முஸ்லிம்கள் மத்தியில் மாறிவரும் சூழல்பற்றிய விவாதங்கள் போதிய அளவு இடம்பெற வேண்டும்

    ReplyDelete
  4. UNO will fan the fire, Ranil & Mangala will provide fuel.

    ReplyDelete

Powered by Blogger.