Header Ads



'என்னுடைய பதவியும், உயிரும் இல்லாமல் போகலாம்' – ஜனாதிபதியின் உணர்ச்சி உரை

தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பிலும் தம் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபதி நேற்று (23) நடைபெற்ற நிகழ்வின்போது கருத்துத் தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி இந்த நாட்டு மக்கள் என்னை ஜனாதிபதியாகத் தெரிவுசெய்தார்கள். அன்று காணப்பட்ட பிரச்சினைகளின்படி, நான் சரியான பாதையை தான் தேர்வுசெய்தேன். அன்று நான் எடுத்த தீர்மானம் சரி என்பதனை இன்றும் கூறுவேன். ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள அனைவரும் மைதானத்தில் தனியே இருந்து விளையாடியதைப் போல இன்று பாராளுமன்றத்தில் முழுநாளும் இருந்தனர். பாராளுமன்றத்தில் இருக்காத என்னை அவர்களின் உரைகளின் ஊடாக விளையாட்டுப் பொருளாக்கியதை நான் பார்த்தேன். எனது மகள் எழுதிய ‘ஜனாதிபதி தாத்தா’ எனும் நூல் இன்று பாராளுமன்றத்தில் பேசு பொருளாகியது. குழப்பமடைய வேண்டாம் என அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றென். ‘ரணிலுடன் வெற்றியளிக்காத அரசியல் பயணம்’ எனும் நூலை எதிர்வரும் ஜனவரி மாதம் வௌியிடவுள்ளேன். ஜனவரி மாதம் அதனையும் வாசிக்குமாறு அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறென். இந்த நாட்களில் எவ்வாறெல்லாம் என் மீது விமர்சனங்கள் முன்வைக்கின்றார்கள் என நான் பார்த்தேன். தாய்நாட்டிற்கு சிறந்த அரசியல் எதிர்காலத்தைக் கொண்டுவருவதற்காகவே நான் இருக்கிறேன் என்பதனைத் தௌிவாக அவர்களுக்கு கூறிக்கொள்கிறேன். என்னை கெட்டவராக காட்ட முயற்சிப்பவர்கள் நாளை அல்லது எதிர்காலத்தில் நான் சிறந்த மனிதன் என்பதனை அறிந்துகொள்வார்கள். இந்தப் போரில் 2 விடயங்கள் எனக்கு இல்லாமல் போகும். மிகவும் சந்தோசத்துடன் நான் அவற்றை ஏற்றுக் கொள்கின்றென். எனக்கு இல்லாமல்போகும் இரு விடயங்களில் ஒன்று என்னுடைய பதவி. அடுத்தது என்ன? இரண்டாவது என்னுடைய உயிர். இரண்டில் ஒன்றை இழக்கலாம். அல்லது இரண்டும் இல்லாமல் போகக்கூடும். இந்தப் போரில் நான் தனி ஆள் இல்லை என தெரியும். அரசியல்வாதிகளை நம்பி நான் இதனை கூறவில்லை. எதிர்காலத்தில் சிறந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என நம்பிக்கை வைத்துள்ள இந்த நாட்டு மக்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். இலங்கையில் உள்ள எந்தவொரு அரசியல்வாதிக்கும் சவால் விடுக்கிறேன். யார் சரி யார் பிழை என நாட்டிற்காக தௌிவூட்டுவதற்கு என்னுடன் விவாதத்திற்கு வாருங்கள். நான் தயார். தூய்மையானவர்களுக்கு அசுத்தமானவர்களின் சவால் தேவையில்லை. நான் அதிகாரத்தில் வந்த நபர் அல்ல. அதிகாரத்தில் இருந்து வெளியேற விரும்பும் ஒருவர். இருக்கும்போது செய்ய வேண்டியதை செய்து விட்டு சந்தோசமாக செல்லும் நபர்
என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. இந்த நாட்டை அராஜகத்துக்குத்தள்ளி கூத்துபார்க்கும் அத்தனை நாசாகார சக்திகளும் அழிந்து ஒழிய வேண்டும் என இந்த நாட்டு மக்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டே இருக்கின்றார்கள்.

    ReplyDelete
  2. MR. In your Three(3) years service could you please tell/list us Three (3) good thinks you did for our Mother SriLanka.
    Talking about nonsense book...

    ReplyDelete
  3. In your book, do not forgot to include how had Mahinda planned to bury you 8 feet below the ground, if Mahinda wins the presidential election in 2015.

    ReplyDelete
  4. உன்ட உயிரும் எங்கிட மயிரு மாதரி ெ தாலை ந்து ே பா

    ReplyDelete

Powered by Blogger.