Header Ads



"ஆபாச வார்த்தைகளால், நாடாளுமன்ற குழுக் கூட்டம்" -

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் நேற்று மாலை நடந்துள்ளதுடன் அதில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவை கடுமையாக சாடியதாக கூறப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களான நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி. திஸாநாயக்க மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

மகிந்த ராஜபக்ச தலைமையிலான நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாது அவமதிப்புக்கு உள்ளானமையே இதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பெரும்பான்மை பலம் இருப்பதாக கூறி, எஸ்.பி.திஸாநாயக்க, மகிந்த ராஜபக்சவை சிக்கலில் மாட்டி விட்டதாக கூறியுள்ள ரஞ்சித் சொய்சா உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், எஸ்.பி. திஸாநாயக்கவையும் ஜனாதிபதி சிறிசேனவையும் ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளதாக பேசப்படுகிறது.

தூரநோக்கம் கருத்து எடுத்த தீர்மானம் காரணமாக மகிந்த ராஜபக்சவுக்கு திருட்டு பிரதமர் என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தான் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர் சூழ்ச்சி அரசாங்கத்தின் உறுப்பினர்கள் என முத்திரை குத்தப்படுவதாகவும் ரஞ்சித் சொய்சா குறிப்பிட்டுள்ளார்.

மிகவும் சிரமத்திற்கு மத்தியில் வளர்க்கப்பட்ட கட்சியும் அதிகார பேராசையின் முகாம் என சமூகத்தில் விமர்சிக்கப்படுவதாகவும் இதன் காரணமாக மக்கள் மத்தியில் கட்சி பெற்றிருந்த ஆதரவு குறைந்து விட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்தும் அவதூறு, அவமதிப்பை சந்திப்பதா இல்லையா எனபது குறித்து உடனடியாக தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி போராட்ட பைத்தியங்கள் இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனான உறவை சீக்கிரமாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

No comments

Powered by Blogger.