Header Ads



தூரியன் பழத்தால், விமானம் தாமதம்

விமானத்திற்குள் தூரியன் பழ வாடை வீசியதால் இந்தோனேசிய விமானம் ஒன்று ஒரு மணி நேரம் தாமதம் ஏற்பட்டுள்ளது.

உலகில் மிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் பழமான தூரியன் விமானத்தின் சரக்குப் பகுதியில் வைக்கப்பட்டிருந்ததால் விமானத்தில் பயணம் செய்ய பயணிகள் மறுத்துள்ளனர்.

திங்கட்கிழமை, சுமத்ராவிலுள்ள பெங்குலு மாவட்டத்திலிருந்து ஜக்கர்த்தாவிற்குச் சென்ற விமானத்தில் அந்தச் சம்பவம் நடந்தது.

ஊழியர்களிடம் பயணிகள் தூரியன் பழத்தின் வாடை குறித்துக் குறைகூறினர். அதே நேரத்தில் கூடுதலாக விமானத்தில் எடுத்துச் சொல்லப்படும் எடை பற்றியும் அக்கறை தெரிவித்தனர்.

விமானத்தில் 2 தொன்னுக்கும் அதிகமான தூரியன் பழங்களை எடுத்துச் சென்றதை அந்நிறுவனம் ஒப்புக்கொண்டது. இருப்பினும் தூரியன் பழங்களோ அதன் வாடையோ எந்தவோர் ஆபத்தையும் விளைவிக்காது என்று அந்நிறுவனம் தெளிவுபடுத்தியது.

விமானத்தில் எடுத்துச் செல்லக்கூடாத அளவுக்கு தூரியன் பழங்கள் ஆபத்தான பொருளல்ல எனவும் அந்நிறுவனம் கூறியது.

ஆசிய நாடுகளில் பிரபலமான தூரியன் பழத்தை பொதுப் போக்குவரத்து, ஹோட்டல்கள் மற்றும் விமானங்களில் கூட எடுத்துச் செல்ல சில நாடுகளில் தடை உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.