Header Ads



சம்பந்தன் அநுரவுடன், ஹக்கீம் ரிஷாத் கைகோர்க்க வேண்டும்

அர­சியல் நெருக்­கடி நிலைமை நாளுக்கு நாள் அதி­க­ரித்துச் செல்­கின்ற நிலையில், ஜன­நா­ய­கத்தைப் பாது­காப்­ப­தற்­கான நம்­பிக்கை தரும் நகர்­வுகள் சிலவும் இடம்­பெற்று வரு­கின்­றமை ஆறுதல் தரு­வ­தாக உள்­ளது.

நேற்று முன்­தினம் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிற்கும், மக்கள் விடு­தலை முன்­ன­ணிக்கும் இடையில் இடம்­பெற்ற சந்­திப்பும் இதன்­போது இரு கட்­சி­க­ளுக்­கு­மி­டையே எட்­டப்­பட்ட இணக்­கப்­பாடும் இன்­றைய நாட்­களில் மிக முக்­கி­ய­மா­ன­தாகும். 

தென்­னி­லங்கை சிங்­கள மக்­களை அதிகம் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியும் வடக்கு கிழக்கு தமிழ் மக்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பும் இவ்­வாறு நாட்டின் ஜன­நா­ய­கத்தைப் பாது­காப்­ப­தற்­காக ஒன்­று­பட்டுச் செயற்­பட முன்­வந்­தி­ருப்­பது ஏனைய அர­சியல் கட்­சி­க­ளுக்கு முன்­மா­தி­ரி­யான செயற்­பாடு என்­ப­துடன் பணத்­துக்­காக விலை போகும் கொள்­கை­யற்ற பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் முகங்­க­ளிலும் கரி­யினைப் பூசி­யுள்­ளது.

அந்த வகையில், நாட்டின் அர­சி­ய­ல­மைப்­பிற்கு முர­ணாக ஆட்சி அமைப்­ப­தற்கோ, அரசைக் கவிழ்க்­கவோ, ஒரு­போதும் இட­ம­ளிக்க முடி­யாது என்றும் ஜன­நா­ய­கத்­திற்கு முர­ணான சதித் திட்­டங்­களை பாரா­ளு­மன்­றத்தில் தோற்­க­டிப்­பது தொடர்­பிலும், அதில் தலை­யீடு செய்­வது தொடர்­பிலும் இணக்கம் எட்­டப்­பட்­ட­தா­கவும் சந்­திப்பின் பின்னர் கருத்து தெரி­வித்த தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு மற்றும்  மக்கள் விடு­தலை முன்­னணி ஆகிய இரண்டு கட்­சி­க­ளி­னதும் தலை­வர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

இது தொடர்பில் எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெளி­யி­டு­கையில்,  ''ஜன­நா­யகம் பாது­காக்­கப்­பட வேண்டும். அர­சி­ய­ல­மைப்பு பின்­பற்­றப்­பட வேண்டும். அர­சி­ய­ல­மைப்பை மீறி செயல்­பட முடி­யாது. சமீ­பத்தில் நடந்த விட­யங்கள் அர­சி­ய­ல­மைப்­பிற்கு முர­ணா­னவை. பதவி நீக்கம், புதிய பிர­தமர் பதவி நிய­மனம் இவை எல்லாம் அர­சி­ய­ல­மைப்­பிற்கு முர­ணாக நடந்­துள்­ளன. இது மக்­களின் இறை­யாண்­மையை இல்­லாமல் செய்­கி­றது. ஜன­நா­ய­கத்தை இல்­லாமல் செய்­கி­றது. அதனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. அதனை இயன்­ற­ளவு எதிர்க்க வேண்­டி­யதும், தடுக்க வேண்­டி­யதும் எங்­களின் கடமை. மக்கள் சார்­பாக நாங்கள் செய்ய வேண்­டிய கடமை. அந்தக் கட­மையில் நாங்கள் தவ­ற­மாட்டோம். பாரா­ளு­மன்­றத்தை ஒத்­தி­வைத்­து­விட்டு, நாங்கள் அறி­கின்ற வகையில், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் விலை கொடுத்து வாங்­கப்­ப­டு­கி­றார்கள். இவ்­வி­த­மான செயல்­களை ஒரு­போதும் ஏற்க முடி­யாது. இவ்­வி­த­மான செயல்கள் தீவி­ர­ம­டைந்தால் நாட்டில் ஜன­நா­யகம் நிலைக்­காது. அதனை நாங்கள் எதிர்க்­கிறோம். அதனை நாங்கள் ஒரு­போதும் ஏற்க மாட்டோம்.'' என்று அழுத்தம் திருத்­த­மாகக் கூறினார்.

உண்­மையில் இவ்­விரு கட்சித் தலை­வர்­க­ளிதும் நிலைப்­பாடு பாராட்­டுக்­கு­ரி­ய­தாகும். இதே நிலைப்­பாட்டில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரசும் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரசும்  உறு­தி­யாக இருக்கும் என நம்­பு­கிறோம்.
நாம் எந்­த­வ­கை­யிலும் ஜன­நா­ய­கத்தை அழிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளுக்கு துணை­போ­க­மாட்டோம் என அ.இ.ம.கா. தலைவர் ரிஷாத் பதி­யுதீன் தெரி­வித்­துள்ளார். தற்­போது ஏற்­பட்­டுள்ள அரா­ஜக நிலை­மையை கட்­டுப்­ப­டுத்தி நீதியை நிலை­நாட்டப் பாடு­ப­டுவோம் என மு.கா. தலைவர் ரவூப் ஹக்­கீமும் தெரி­வித்­துள்ளார். 

அந்­த­வ­கையில் இவ்­விரு முஸ்லிம் தலை­வர்­களும் இரா.சம்­பந்தன் மற்றும் அநு­ர­கு­மார திசா­நா­யக்­க­வுடன் இணைந்து ஜன­நா­ய­கத்தைப் பாது­காப்­ப­தற்­கான தமது உறு­திப்­பாட்டை பகி­ரங்­க­மாக வெளி­யிட வேண்டும். அது இந்த நாட்டின் பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் குறிப்பாக நீதியாக சிந்திக்கின்ற மக்கள் மத்தியில் நல்லதொரு அபிப்பிராயத்தை தோற்றுவிக்கும். அத்துடன் பணத்துக்காகவும் அதிகாரத்துக்காகவும் சோரம் போகும் முஸ்லிம் கட்சிகள் என்ற அவப் பெயரையும் இல்லாதொழிக்கும். இது பற்றி இரு முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும் நேர்மையாகச் சிந்தித்து செயற்படுவார்கள் என நம்புகிறோம்.

விடிவெள்ளி

5 comments:

  1. சம்பந்தன் அய்யாவை நம்பி இறங்க முடியுமா..

    ReplyDelete
  2. பாராளுமன்றம் இன்று கலைக்கப்படாமல் பார்த்துக்கொண்டால் நல்லது.

    ReplyDelete
  3. Risad hakeem pls suppot to mahinda sir

    ReplyDelete
  4. It is a good article and hope Rishad and Hakeem will follow it. They must safeguard democracy and not the political aspirations.

    ReplyDelete

Powered by Blogger.