Header Ads



பதவி விலகுமாறு, சுதந்திரக் கட்சி கோரிக்கை - மகிந்த அதிர்ச்சி

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற முடியாது போல், தொடர்ந்தும் பிரதமர் பதவியில் இருக்காது உடனடியாக விலகுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 15 பேர் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, மகிந்த ராஜபக்சவிடம் கூறியுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று -28- அவரை சந்தித்துள்ளனர்.

குறித்த சந்திப்பின் போதே இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்கள்,

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமின்மை மற்றும் பொருளாதார வீழ்ச்சியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகுவது அத்தியாவசியமானது என்பதை சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமல், தொடர்ந்தும் பலவந்தமாக பதவியில் இருப்பது, ஜனாதிபதிக்கு தேவையற்ற அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலும் நெருக்கடி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாகவும் இந்த நிலைமை பொறுத்துக்கொள்ள முடியாது எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

மகிந்த உடனடியாக பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற முடிவை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உத்தியோகபூர்வ முடிவாக எடுத்துக்கொண்டாலும் தவறில்லை எனவும் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.


1 comment:

  1. Who cares the country; I need power; Go to hell; Who is SLFP; My3 is in the soup.....

    ReplyDelete

Powered by Blogger.