Header Ads



என்னுடன் விளையாட வேண்டாம் - ரணிலை எச்சரிக்கிறார் மைத்திரி

நாடாளுமன்றில் பெரும்பான்மை பலத்தை நிரூபித்து காட்டுவோம். இதனை யாராலும் தடுக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று -08- மாலை இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“பல்வேறு வித்தைகளை காட்டி ஆட்சியை கைப்பற்ற ரணில் நினைக்கின்றார். எனினும், அதற்கு நான் ஒருபோதும் இடம்கொடுக்க போவதில்லை.

என்னிடம் பல அஸ்திரங்கள் கைவசம் இருக்கின்றன. அவற்றை பயன்படுத்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டுமானால் அதையும் செய்ய தயங்க போவதில்லை.

எனவே, சம்பந்தப்பட்டவர்கள் விளையாட வேண்டாம் என இந்த நேரத்தில் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். நாடாளுமன்றில் பெரும்பான்மை பலத்தை நிரூபித்து காட்டுவோம்.

இதனை எவறாலும் ஒருபோதும் தடுக்க முடியாது” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. ​பொதுமக்களாகிய எங்களுக்கு விளங்காத மயக்க மருந்து அருந்திவிட்டு அரசியல் பேசி பொதுமக்களை மென்மேலும் கஷ்டத்தில் விழுத்தும் அரசியல் செய்யும் இந்த வீணாப்போனவர்களுக்கு இந்த நாட்டுமக்கள் என்ன பதில் கொடுக்கப்போகின்றனர் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  2. Please do not make us laugh. Your still child in mind and as well as in politics. You being in politics since long years but your experience and what you learn is zero. You took the leadership of SLFP but you failed to keep the party unity. Everybody knows in the country that you are not capable to be a president

    ReplyDelete

Powered by Blogger.