Header Ads



"முரளீ, நீங்கள் எங்கள் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கின்றீர்கள்" - கோத்தா பாராட்டு

இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் சமீபத்தில் வெளியிட்ட கருத்திற்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அவரிற்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச தனது டுவிட்டர் செய்தியில் இதனை தெரிவித்துள்ளார்

அனைத்து அரசியல்தலைவர்களும் இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் பாடுபடவேண்டும் என்ற எனது நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் விதத்தில் முரளீதரனின் கருத்து அமைந்துள்ளது என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முரளீதரன் நீங்கள் எங்கள் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கின்றீர்கள் என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களிற்கு அரசியல் தீர்வு அவசியம் என தெரிவித்து வருகின்றர் எனினும் அவ்வாறான தீர்வொன்று தேவையா என முரளீதரன் கேள்வி எழுப்பியிருந்தார்.

நாட்டின் பெரும்பான்மை மக்கள் அரசியல்வாதிகளிடம் கேட்பது ஜனநாயகத்தையோ அல்லது உரிமைகளையோ இல்லை மூன்று வேளை உணவு உண்பதற்கும் தமது பிள்ளைகளிற்கு சிறந்த கல்வியை பெற்றுத்தருவதற்குமான பொருளாதார அபிவிருத்தியையுமே கேட்கி;ன்றனர் என  முத்தையா முரளீதரன் தெரிவித்திருந்தார்.

2 comments:

  1. This time Murali has thrown "NO BALL".

    ReplyDelete
  2. ஜனநாயகம்,உரிமை,நீதி நியாயம்,பாதுகாப்பு போன்வைகளின்
    சீரிய நிலமையை பொாறுத்துத்தான்
    ஒரு நாட்டினுடைய அபிவிருத்தியும்
    முன்நகர எத்தனிக்கின்றது.அபிவிருத்தி என்றால்
    வெறும் பொருளாதார வளர்ச்சி என்பதோடு மட்டுப்படுத்துவதில்லை
    மாறாக ஒருமனிதன் சந்தோசமாகவும்
    நிம்மதியாகவும் ,அச்சமின்றியும் வாழ்வதற்கான சூழல்கள் ஒரு நாட்டில் உருவாக்கப்படுமாக இருந்தால் அந்த
    நாடு அபிவிருத்தி அடநை்த அல்லது
    அதை நோக்கிய ஒரு நாடாக கொள்ள
    முடியும்.இங்கு ஒரு வேளை உணவு உட்கொண்டாலும் அவன் மூவேளை
    உட்கொண்டதற்கான திருப்தியை அடைந்து கொள்வான் அதைவிடுத்து
    நீதி நியாயங்களும் ஜனநாயக பரபுகளும் மீறப்படும் ஒருநாட்டில் ஒருவன் தினமும் மூவேளை உணவு உண்ணக்கிடைத்தாலும் அவன்ஒருவேளை உணவு உண்ட தருப்தியைகூட பெறமாட்டான் என்பதுதான்
    எதார்த்தமாகும் .உலகத்திலே இரண்டு
    விதமான மக்கள் வாழ்கிறார்கள் ஒன்று அறிவிலும் ஆற்றலிலும் மேன்பட்ட மக்கள் மற்றது அறிவிலும் ஆற்றலிலும் குறைவடைந்த பாமரமக்கள் முரளீதரன் போன்றவர்கள் குறிப்பிட்டது
    இந்த பாமர மக்களுக்கு பொருத்தமாக
    இருக்கலாம்.

    ReplyDelete

Powered by Blogger.