Header Ads



பொதுபல சேனா மீது தாக்குதல் - ஜனாதிபதியின் இரட்டை வேடத்தை, அம்பலப்படுத்தும் ஹிருணிகா

குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரி ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு பின்னால் ஜனாதிபதியே இருப்பதாகவும் ஹிருணிகா தெரிவித்துள்ளார்.

இடமாற்றப்பட்டுள்ள நிஷாந்த சில்வா குற்றப்புலனாய்வு பிரிவின் திறமையான அதிகாரியொருவர். அவர் அரசியலுக்கு அப்பாற்பட்ட அதிகாரியெனத் தெரிவித்துள்ள ஹிருணிகா தற்போது சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சு ஜனாதிபதியின் பொறுப்பின் கீழேயே இருப்பதால் இந்த இடமாற்றம் கண்டிப்பாக ஜனாதிபதியின் ஆணைக்கமையவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஹிருணிகா குற்றஞ்சுமத்தியுள்ளார்.

இதுவரை நடைபெற்ற அனைத்து சம்பவங்களும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பொறுப்பின் கீழேயே நடைபெற்றனவென்றும்  அவரால் அதன் பொறுப்புகளை வேறொருவரிடம் திணிக்க முடியாதென நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்ர தெரிவித்துள்ளார்.

இன்று -19- அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்​கொண்டப் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொதுபல சேனா அமைப்பின் மீது இன்று நடத்தப்பட்ட தாக்குதல் தனக்கு தெரியாதென ஜனாதிபதி தெரிவித்துள்ளதாகவும் இவரிடம் இருக்கும் பழக்கம் தான் பந்தை மற்றையவரிடம் மாற்றுவது ஆனால் ஜனாதிபதியால் இப்போது அதனைச் செய்ய முடியாது காரணம் ஜனாதிபதி​யின் பொறுப்பிலேயே பொலிஸ் இயங்குகின்றது என்றார்.

4 comments:

  1. Rae daniel - dawal migel.....

    ReplyDelete
  2. Expect a BIG DISASTER very soon in SRILANKA...... By Criminal President...

    Maithrypala Sirisayna was behind Aluthgama and Degana incident reported by CID.

    ReplyDelete
  3. TIME HAS COME NOW FOR THE TAMIL AND MUSLIM LEADERS TO THING ABOUT THEIR OWN SAFETY AS NO SINGALA LEADER WILL COME FORWARD TO SAFEGUARD THEM IN TROUBLE TIME.THE SO CALLED DMO-CRAZY YOU ARE SUPPOSED TO BE TRYING TO SAFEGUARD WILL NOT SAFEGUARD THE LIFE OF POOR TAMILS AND MUSLIMS IN SRI-LANAKA

    ReplyDelete
  4. President is the culprit behind all the mess,he should be removed sooner the better for the hole country

    ReplyDelete

Powered by Blogger.