Header Ads



நள்ளிரவில் ரணிலிடம் சென்ற, மைத்திரியின் சகாக்கள் - அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு

சுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கும், பொது தேர்தலை நடத்துவதற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டிருந்த தீர்மானத்திற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனால், கொழும்பு அரசியல் பரபரப்படைந்துள்ளது. நீதிமன்றின் நிலைப்பாடு வெளியானதை தொடர்ந்து கொழும்பில் முக்கிய தலைவர்கள் சந்தித்து பேசியுள்ளனர்.

அந்த வகையில்  புதன்கிழமை   நாடாளுமன்றம் கூட்டப்படவுள்ளது. இதன் போது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்புகள் நடத்தப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறான நிலையில், சிறிலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவை சற்று முன்னர் அலரி மாளிகையில் சந்தித்து பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சந்திப்பில் கலந்துகொண்ட சிறிலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் குறித்தும், இதன் போது பேசப்பட்ட விடயங்கள் குறித்தும் தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.

தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் நாளைய தினம் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் மாற்றுவழி குறித்து இதன் போது பேசியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.