Header Ads



இஸ்­லா­மி­யர்­கள் எங்­கேயோ போய்­விட்­டார்கள், அவர்களின் இடங்கள் இங்­கி­லாந்தைப் போல இருக்­கின்­றன

Q: யாரை ஆத­ரிப்­பது என்ற முடிவை கூட்­ட­மைப்பு எடுப்­ப­தற்கு முன்­பா­கவே நீங்கள் மஹிந்த பக்கம் சாய்ந்­தது ஏன்?

2015 செப்­டம்பர் முதலாம் திகதி பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக வந்­த­தி­லி­ருந்து 3 ஆண்­டு­க­ளா­கி­விட்­டன. இந்த மூன்று ஆண்­டு­களில் ஐக்­கிய தேசியக் கட்சி கொண்­டு­வந்த வரவு - செலவுத் திட்டம் ஒவ்­வொன்றும் தீர்­மா­னத்­திற்கு விடும்­போது கைகளை உயர்த்­தி­யி­ருக்­கிறோம். பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மீது நம்­பிக்­கை­யில்லாத் தீர்­மானம் கொண்­டு­வ­ரப்­பட்­ட­போ­து­கூட, அவரைப் பாது­காக்க எதிர்க்­கட்சி வரி­சையில் இருந்த தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு ஆத­ரவு தெரி­வித்­தி­ருக்­கி­றது. நாங்கள் அர­சியல் தீர்­வுக்­காக பல விஷ­யங்­களை விட்­டுக்­கொ­டுத்­தி­ருக்­கிறோம், ஆத­ரவு வழங்­கி­யி­ருக்­கிறோம், ரணில் அரசைப் பாது­காத்­தி­ருக்­கிறோம். ஆனால், எங்­க­ளுக்குக் கிடைத்­தது என்ன? அர­சியல் கைதி விடு­விப்பு, காணி விடு­விப்பு என எத்­த­னையோ உட­ன­டி­யாக செய்ய வேண்­டிய பிரச்­சி­னை­களில் எந்தத் தீர்வும் கிடைக்­க­வில்லை. இதற்­கி­டையில், கிழக்கு தொடர்­பாக நான் முன்­வைத்த மூன்று கோரிக்­கை­களில் இரண்­டுக்கு சாத­க­மான பதிலைத் தந்தார் ஜனா­தி­பதி.

ஆகவே, கிழக்கின் அபி­வி­ருத்­தியை மையப்­ப­டுத்தி, ஜனா­தி­ப­தியின் அழைப்பின் பேரில் கிழக்கு அபி­வி­ருத்­தியின் பிர­தி­ய­மைச்­ச­ராக நான் பொறுப்­பேற்­றி­ருக்­கிறேன். தவிர, தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பி­லுள்ள சில­ரது செயற்­பா­டுகள், குறிப்­பாக தமி­ழ­ரசுக் கட்­சியில் உள்ள சில­ரது செயற்­பா­டு­களால் பல கால­மா­கவே மன அழுத்­தத்­திற்கு உள்­ளா­கி­யி­ருக்­கிறோம்.

தேர்தல் நடக்கும் காலத்­தி­லேயே எங்­களை ஆயுதக் குழுக்கள், ஒட்­டுக்­கு­ழுக்கள் என்­றெல்லாம் இவர்கள் விமர்­சித்­தார்கள். அவர்­கள்தான் இப்­போது எங்­களை துரோ­கிகள் என்­கி­றார்கள். உரிமை கேட்டோம். அதுவும் கிடைக்­க­வில்லை. அபி­வி­ருத்­தியும் கிடைக்­க­வில்லை. சகோ­தர சமூ­கங்­க­ளான இஸ்­லா­மி­யர்­களும் சிங்­க­ள­வர்­களும் எங்­கேயோ போய்­விட்­டார்கள். அவர்கள் வசிக்கும் இடங்கள் இங்­கி­லாந்தைப் போலவும் நாங்கள் வசிக்கும் இடங்கள் சோமா­லி­யாவைப் போலவும் இருக்­கின்­றன. நிலைமை இப்­ப­டியே நீடிக்கும் பட்­சத்தில் ஐந்து வரு­டங்­க­ளுக்குப் பிறகு மக்­க­ளிடம் போய் நின்றால் மக்கள் செருப்பால் அடிப்­பார்கள்.

Q: மஹிந்த கடந்த காலங்­களில் தமி­ழர்­க­ளுக்­கான அர­சியல் தீர்வில் எந்த விட்­டுக்­கொ­டுப்­பையும் செய்­த­வ­ரல்ல. இப்­போது அவ­ரது அமைச்­ச­ர­வையில் இணைந்து என்ன செய்ய முடி­யு­மென நினைக்­கி­றீர்கள்?

நான் மஹிந்­தவின் அழைப்பின் பேரில் இணை­ய­வில்லை. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அழைப்பின் பேரில்தான் நான் இணைந்­தி­ருக்­கிறேன். கடந்த ஆகஸ்ட் மாதம் சந்­தித்­த­போது, எது­வுமே நடக்­க­வில்லை, எதையும் செய்­ய­வில்லை என்­றீர்­களே, இப்­போது வந்து இணை­யுங்கள் என்றார். அதனால், கிழக்கு அபி­வி­ருத்­தியை நான் கேட்டுப் பெற்றேன்.

மக்­களின் அபி­வி­ருத்தி சார்ந்த விஷ­யங்­களில் எந்தக் கட்சி வேக­மாக செயல்­ப­டு­கி­றதோ, அத­னோடு இணைந்து நான் பய­ணிப்பேன். கட்சி நல­னுக்­காக, தனிப்­பட்ட நல­னுக்­காக நான் செயற்­பட்டால் பிறகு வாக்­க­ளிக்­கவே மக்கள் இருக்­க­மாட்­டார்கள். உரி­மையைப் பெற்றுத் தரு­கிறேன் என்று தொடர்ந்து கூறி, மக்­களை ஏமாற்­றக்­கூ­டாது. எங்கு போனாலும் மக்கள் என்ன செய்­தீர்கள் எனக் கேட்­கி­றார்கள். மக்கள் வறு­மையில் மதம் மாறு­கி­றார்கள். அவர்­களை துரோ­கிகள் என்று சொல்­லப்­போ­கி­றோமா?

Q: உங்களை அடையாளம் கண்டு முன்னிறுத்தியவர் சித்தார்த்தன். அவரைக் கைவிட்டிருக்கிறீர்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் ஆறு கட்சிகள் இருந்தன. இன்றைக்கு வெறும் மூன்று கட்சிகள் மட்டுமே இருக்கின்றன. கடைசியாக ஈபிஆர்எல்எஃப்பும் வெளியேறியது. ஏன் வெளியேறினார்கள்? எனக்கு வாய்ப்பளித்ததற்காக சித்தார்த்தனுக்கு நன்றி கூறுகிறேன். ஆனால், அவரிடம் பல முறை பேசியிருக்கிறேன். அபிவிருத்திக்காக ஏதாவது செய்யுங்கள் என்றேன். ஆகவே அவருக்கு நிலைமை தெரியும். கிழக்கின் நிலை வேறு. யாரும் எதுவும் சொல்லிவிட்டுப் போகட்டும். சித்தார்த்தன் எனக்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி கூறுகிறேன். ஆனால், அவரோடு தொடர்ந்து இந்தக் கூட்டுக்குள் இருக்க மனசாட்சி இடம் கொடுக்கவில்லை.

-Vidivelli


8 comments:

  1. கிழக்கில் இஸ்லாமியர்கள், சிங்களவர்கள் முன்னேறி விட்டார்கள். தமிழர்களும் அவ்வாறு முன்னேற வேண்டும் என்ற சிந்தனை வரவேற்க தக்கது.

    இந்த சிந்தனை மாற்று சமூகங்கள் மீதான பொறாமையாக இல்லாது உங்கள் சமூகத்துக்கு படிப்பினையம் ஆர்வத்தையும் அளிக்கும் என்று நம்பலாமா?

    ReplyDelete
  2. can tell any stories for your own benefit...go ahead

    ReplyDelete
  3. இனக்கலவரம் ஒன்றை உண்டாக்கி நெருப்பு வைக்கலாமே.

    ReplyDelete
  4. இனவாத அரசியலிற்கு பழகி இவனுக்கு முதலமைச்சர் பதவி ஆசை வந்துவிட்டது. இத்துப்போன TNA விலிருந்தால் அது நடக்காதென்பதற்காகவும், ராஜபக்சர்களிடம் கிடைக்கப்பெற்ற பெருந்தொகையான பணத்திற்காகவும் பல்டியடித்துவிட்டு இன்று வேறு கதை சொல்கிறான்

    ReplyDelete
  5. ஒருபோதும் முஸ்லீம் சமூகம் சகோதர இனத்தின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்க மாட்டார்கள் .எனவே முஸ்லீம் சிவில் அமைப்புக்களுடன் கலந்துரையாடுங்கள் .நிச்சயமாக அவர்கள் சகோதர சமூக முன்னேற்றத்துக்கு உதவி செய்வார்கள்

    ReplyDelete
  6. தென்னிலங்கையில் ஞானசார முஸ்லிம்கள் மீது கொண்ட பொறாமையின் காரணமாக ஒரு கலவரத்தை உண்டு பண்ணி தற்போது அதனை அவர் எல்லை மீறி அனுபவிக்கிறார். எங்கள் பொறுமைக்கு கிடைத்த கூலி எனலாம்.

    முன்னேறுவதட்கு போட்டி வேண்டும் ஆனால் பொறாமை கூடாது.

    ReplyDelete
  7. குடிப்பழக்கத்தை விட்டு, வட்டிக்குக் கொடுப்பதை விட்டு, மற்றைய தமிழனையும் சகோதரனாய் மதித்து, அவனுக்கு உதவி இன்னும் கடின உழைப்பாளியாய் மாறினால் பிரதியமைச்சரும் அவரது சமூகமும் இங்கிலாந்தைப் போல் இலங்கையில் வாழலாம். அதைவிடுத்து சோனி சோனி என்று இனவாதத்தை மூட்டினால் அது அவர்களை அவர்களே அநியாயப் படுத்திக் கொள்வதே!

    ReplyDelete

Powered by Blogger.