Header Ads



ரணிலின் கீழ் நடந்த சகல மோசடிகள், முறைகேடுகள் பற்றி ஆராய புதிய ஆணைக்குழு

ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் இடம்பெற்ற அனைத்து மோசடிகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பிலும் ஆராய்ந்து பார்ப்பதற்காக புதிய ஆணைக்குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பு கொழும்பு 7 உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

கடந்த ஒக்டோபர் 26ம் திகதி ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கி புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமித்ததன் பின்னர் நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி நிலைமையை அடுத்து முதன் முறையாக இலங்கையிலிருந்து வெளிநாடுகளைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் ஊடகங்களின் செய்தியாளர்களை சந்தித்தபோதே ஜனாதிபதி இந்தக்கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

இந்த ஆணைக்குழுவானது பிணைமுறி மோசடியை விடவும் மிகமோசமான மோசடியை கண்டுபிடிக்கும் என்பதில் தனக்கு நிச்சயமுள்ளது. 

”ஐக்கிய தேசிய முன்னணிக்கு பெரும்பான்மை உள்ளதாக சட்டபூர்வமாக நிரூபிக்கப்படினும் கூட ரணில் விக்கிரமசிங்கவை என்னிடம் கூட்டிக்கொண்டு வரவேண்டாம் என அவர்களிடம் தெளிவாகக் கூறிவிட்டேன்.”என சிறிசேன உறுதிபடக்கூறியுள்ளார்.

ரணில் நாட்டை நேசிக்கவில்லை,

பாரிய மோசடிகளை புரிந்தமைக்கு ரணிலும் அவருக்கு கீழிருந்த சிலருமே காரணம் என ஜனாதிபதி இந்தச்சந்திப்பின் போது சுட்டிக்காட்டியுள்ளார். ‘ அர்ஜுன் மகேந்திரன் எங்கிருக்கின்றார் என்பது அவருக்கு தெரியும்.

ஆனால் அவர் இன்னமும் அதனை வெளிப்படுத்தவில்லை. அவர் நாட்டை நேசிக்கவில்லை. இலங்கை மிக மோசமான நிலையில் இருந்தது’ என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. மஹிந்த காலத்தையும் சேர்த்து கொள்ளவும் இதை வி ட பல மடங்கு , அதிகம் அன்று நடந்தது , --அதனால் தானே வெளியே வந்தீர் , இப்போ எப்படி நல்லவரானார் இது உங்களுக்கு ஓட்டு போட்ட மக்களின் குரல்

    ReplyDelete

Powered by Blogger.