Header Ads



மகிந்த - மைத்திரிக்கு நியமனத்துக்கு எதிராக, அமில தேரர் உச்சநீதிமன்றில் மனு

மகிந்த ராஜபக்ச சிறிலங்காவின் பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு எதிராக  உச்சநீதிமன்றத்தில், அடிப்படை உரிமை என்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வண. தம்பர அமில தேரர் இன்று இந்த மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

ரணில் விக்ரமசிங்கவை  பிரதமர் பதவியில் இருந்து நீக்கியும்,  மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தும்,  சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, வெளியிட்ட   அரசிதழ் அறிவிப்புகளை செல்லுபடியற்றதாக அறிவிக்குமாறு   அவர் கோரியுள்ளார்.

ஸ்ரீலங்கா அதிபரின் இந்த உத்தரவு அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என்று  உத்தரவிடுமாறு, கோரியுள்ள தம்பர அமில தேரர், இந்த மேலும் மீது உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை, பிரதமராக  மகிந்த ராஜபக்ச, செயற்படவும், அவரது அமைச்சரவையில் உள்ளவர்கள், அமைச்சர்களாக பணியாற்றவும் இடைக்கால தடை விதிக்குமாறும் கேட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.