Header Ads



குத்பாவை சுருக்கி, தொழு­கையை நீட்டிக் கொள்­ளு­ங்கள் - ஜம்­இய்­யத்துல் உலமாவின் முக்கிய அறிவுரை


குத்பா பிர­சங்­கங்­களை சுருக்கி தொழு­கையை நீட்டிக் கொள்­ளு­மாறு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை நாட்­டி­லுள்ள அனைத்து  ஜும்ஆ பள்­ளி­வா­சல்­களின் கதீப்­மார்­க­ளையும் பள்­ளி­வாசல் நிர்­வா­கங்­க­ளையும் கோரி­யுள்­ளது. அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் செய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் ஜும்ஆ பள்­ளி­வா­சல்­க­ளுக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்­தி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

ஜும்ஆ பள்­ளி­வா­சல்­க­ளுக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது;

பெரும்­பா­லான பள்­ளி­வா­சல்­களில் மதியம் 1.30 மணி­யையும் கடந்து ஜும்ஆ பிர­சங்­கங்கள் நடை­பெ­று­வ­தாக உலமா சபையின் கவ­னத்­திற்குக் கொண்டு வரப்­பட்­டுள்­ளது. 

இதனால் ஜும்ஆ தொழு­கைக்­காக குறு­கிய நேர விடு­மு­றையைப் பெற்­று­வரும் அர­சாங்க ஊழி­யர்கள் மற்றும் தனி­யார்­துறை ஊழி­யர்கள் பல சிர­மங்­க­ளுக்­குள்­ளா­கின்­றனர். 

கதீப்­மார்கள் குத்­பாவைச் சுருக்கி தொழு­கையை நீட்டிக் கொள்­வதே சன்மார்க்கத்துக்கான சிறந்த அடை­யா­ள­மாகும். 

குத்பா பிர­சங்­கங்கள் நீண்ட நேரம் இடம்­பெ­று­வதால் வய­தா­ன­வர்கள் மற்றும் நோயாளர்­களும் பல்­வேறு சிர­மங்­க­ளுக்­குள்­ளா­கின்­றனர். இதனைத் தவிர்ப்பதற்காக குத்பா பிரசங்கங்களை சுருக்கிக் கொள்ளுமாறு உலமா சபை ஆலோசனை வழங்குகிறது எனத் தெரிவித்துள்ளது.

-Vidivelli

5 comments:

  1. சிறந்த ஒர் ஞேயல் உன்மையிழ் குவைத் பேன்ற அரபி நாட்டில் 15'20 நிமிடம் தான் ஜும்மா மிக்க மகிழ்ச்சி இலங்கையில் இவ்வாறு ஒரு நிலமை வருவது இற்று.

    ReplyDelete
  2. இதுதான் நபியின் சுன்னாவும் ஆகும்.

    சுன்னாவினை நோக்கி ACJU... Alhamdulillah

    ReplyDelete
  3. பல பேர் தூக்கம்

    ReplyDelete
  4. Kuthba and prayer should be completed before 1:30 to avoid conflict with school traffic, which starts at 1:30.

    ReplyDelete
  5. We are always with ACJU AND it is guiding all the Muslims in Sri Lanka beyond any doubt. However I am personally not agreeable with the above request because the purpose of the Juuma is lost. We were told and taught the jumma is conducted on Fridays to make aware of the happenings against the Islamic teaching during that week and explain the wrong thing and right thing for no repetition of wrong thing instead to follow right thing. Therefore you need more time like at present. It would be appreciated if it is revisited and reconsidered. Please note that I am not for any argument because it is not advised in Islam.

    ReplyDelete

Powered by Blogger.