Header Ads



மைத்திரியை கிழித்து தொங்கவிடும், பேராசிரியர் சரத் விஜேசூரிய (முழு விபரம் இணைப்பு)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக போட்டியிட்ட போது வழங்கிய வாக்குறுதிகளை கேவலமான முறையில் காட்டிக்கொடுத்துள்ளதாக நீதியான சமூகத்தின் மக்கள் அமைப்பின் தலைவர் பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இன்று -08- நடைபெற்ற மாதுளுவாவே சோபித தேரரின் மூன்றாம் ஆண்டு நினைவு தின நிகழ்வில் இன்று கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுத பல முறை முயற்சித்தேன். கௌரவ ஜனாதிபதி அவர்களே என்று எழுத முடியாது போனது. எனது உடலில் உள்ள பஞ்சபூதங்களும் நடுங்க ஆரம்பித்தன.

இப்படியான ஒருவரை எப்படி கௌரவ ஜனாதிபதி விளிப்பது. இந்த நினைவு தின நிகழ்வு இலங்கை மன்ற கல்லூரியில் நடத்தப்படவிருந்தது. ஏதோ ஒரு காரணத்தினால் புதிய நகர மண்டத்தில் நடத்த நேரிட்டுள்ளது.

விதிப்படி நடந்துள்ளது. இந்த இடத்திலேயே மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக முதலில் அமர்ந்தார். அன்று அவர் கூறியவை காதுகளில் எதிரொலிக்கின்றன.

ஆறு மாதங்களில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை முறையை ஒழிப்பதாக கூறினார். ஜனநாயகத்தை பாதுகாத்து, சட்டத்தின் ஆதிபத்தியத்தை காப்பதாக கூறினார்.

எனினும் கேவலமான முறையில் அவர் தனது வாக்குறுதிதிகளை காட்டிக்கொடுத்துள்ளார். இதனை நாங்கள் சில காலங்களுக்கு முன்னரே அறிந்திருந்தோம். சோபித தேரரும் அறிந்திருந்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் பதவியை பெற்றுக்கொண்டமையானது ஜனவரி 8 இன் எதிர்பார்ப்புகள் கொண்ட தண்ணீர் குடத்தை தரையில் அடித்து உடைத்தது போன்ற விடயம்.

ரணில் விக்ரமசிங்கவுடன் அரசாங்கத்தை கொண்டு நடத்த முடியாது என்று மைத்திரிபால சிறிசேன கூறியது பச்சை பொய். குற்றவாளிகளை ஜனாதிபதியே கைது செய்ய இடமளிக்கவில்லை.

சிங்கள கிராமத்தவர்களிடம் இருக்கும் ஒழுக்கம் இந்த நபரிடம் இல்லை. ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிக்குமாறு நான் எவரிடமாவது கோரியிருந்தால், அவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்.

இந்த நாட்டில் நாம் எவ்வளவு காலம் வாழ முடியுமோ தெரியாது. சோபித தேரரின் மூன்றாவது நினைவு தினத்தில் கலந்துக்கொள்ள நாம் ஜனாதிபதி அழைப்பு விடுத்தோம்.

எனினும் அவரால் அதில் கலந்துக்கொள்ள முடியாது.

அதேபோல் ஜனாதிபதி விஜேராம மாவத்தையில் உள்ள தனது வீட்டில் விளக்குகளை அனைத்து விட்டு, பாதுகாப்பு அதிகாரிகளை வெளியேற்றி விட்டு கோத்தபாய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

 " சுதந்திரத்துக்கும் ஜனநாயகத்துக்காகவும் போராடிய மாதுளுவாவே சோபித தேரோ இன்று உயிருடன் இருந்திருந்தால்  தான் ஆதரித்துப் பிரசாரம் செய்த பொதுவேட்பாளரின் நடத்தையைக்கண்டு  பெரும் விரக்தியடைந்திருப்பார்"

தனது ஆலோசகராக சிறிலால்  லக்திலகவை  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த தினத்தில் அவரின் அநாகரிகமான நடத்தையின் முதல்  அறிகுறிகளை சோபித தேரோ அவதானித்தார். என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட தேரோ ஜனாதிபதியின் செயலை நன்றிகெட்டவேலை என்று வர்ணித்தார். 2015 ஜனவரிக்குப் பிறகு இந்த நன்றிகெட்ட குணத்தின் வெளிப்பாடுகளை பலதடவைகள் எம்மால் காணக்கூடியதாக இருந்தது. அக்டோபர் 26 ஜனாதிபதி செய்த காரியம் திடுதிப்பென நடந்தேறியதல்ல. அது நனகு திட்டமிட்டே அரங்கேற்றப்பட்டிருக்கிறது. ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் கொண்டுவருவார் எனற எதிர்பார்ப்பிலும் நம்பிக்கையிலும் தனக்கு வாக்களித்த சகலரினதும் அபிலாசைகளுக்கு முரணாக அமைந்த இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கான சூழ்நிலையை  சிறிசேன மிகவும் ஆறுதலாக தயார்செய்தார் என்பதை இப்போது புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது என்று பேராசிரியர் விஜேசூரிய கூறினார்.

முன்னைய ஆட்சியுடன் தொடர்புடைய ஊழல்காரரகளுக்கும் கொலைகாரர்களுக்கும் கிறிமினல் பேர்வழிகளுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க சட்டத்தை நடைமுறைப்படுத்தும் தரப்பினர் முயற்சித்தபோது அதற்கு குறுககே நின்றவர் ஜனாதிபதி சிறிசேனவே.நிதிக்குற்றங்கள் விசாரணைப்பிரிவின் சட்டபூர்வத்தன்மை குறித்து முதலில் சவால் விட்ட நபர் சுசில் பிரேம ஜெயந்தவே. அவருக்கு எதிரான ஊழல் விசாரணையொன்றை நிறுத்துவதற்கு ஜனாதிபதி தலையீடு செய்தார்.இன்று அதே பிரேம ஜெயந்த நாட்டின் நீதியமைச்சராக சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்திருக்கிறார் என்றும் விஜேசூயிய சாடினார்.

ஜனாதிபதி மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்த பேராசிரியர் விஜேசூரிய " ஜனவரி 8 வாக்குறுதிகளுக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கிளர்ந்தைழுந்த ஒவ்வொரு தருணத்திலும் அதற்குப் பின்னணியில் சிறிசேனவே இருந்தார். அவர் துரோகத்தனமான முறையிலும் பண்பற்ற முறையிலும் செயற்பட்டு தன்னை நாகரிகமற்ற ஒருவராக நிரூபித்திருக்கிறார்" என்றும் குறிப்பிட்டார்.


3 comments:

  1. இன்னும் நிறைய வெளியே கொட்டும்

    ReplyDelete
  2. மனிமங்கள் இன்னும் இலங்கையில் உயிர் வாழ்கின்றன என்பதற்கு பேராசிரியர் விஜேசூரிய ஒரு சான்று.

    ReplyDelete
  3. யாருக்கும் கிழிக்கும் வேலை வைக்காமல், தானே கிழிந்து கந்தலாகி, வீணாய் போய் விட்டார்!

    ReplyDelete

Powered by Blogger.