Header Ads



பாணந்துறையில் தீயில் கருகிய, கடைகளை பார்வையிட்ட பைஸர் முஸ்தபா


சுய நலன் கருதி அரசியல் செய்யாமல், தேசிய நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, அரசியலில் ஈடுபட  முன்வருமாறு அமைச்சர் பைஸர் முஸ்தபா, சகல தரப்பினர்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.     பாணந்துறை நகரின் பிரதான வீதியில், முஸ்லிம்களுக்குச் சொந்தமான நான்கு கடைகள் (25) ஞாயிற்றுக்கிழமை தீக்கிரையானதையடுத்து, அமைச்சர் பைஸர் முஸ்தபா உடனடியாக அவ்விடத்திற்குச் சென்று, நேரடியாக நிலைமைகளைக் கண்டறிந்தார்.

அங்கிருந்தோரிடம் இச்சம்பவம் தொடர்பிலான விபரங்களையும் தெளிவாகக் கேட்டுத் தெரிந்துகொண்டார்.

   அத்துடன், குறித்த சம்பவத்தின் பின்னணியில், "எது சரி... எது பிழை..."  என்பது தொடர்பில் ஆதாரபூர்வமான தகவல்களையும் பெற்று, தேவையான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், அமைச்சர் பொலிஸாரிடமும் பாதுகாப்பு அதிகாரிகளிடமும் கேட்டுக்கொண்டார். 

   அமைச்சர் இங்கு கருத்துத் தெரிவிக்கும்போது,

இன்றைய கால கட்டத்தில், மக்களுக்கு மத்தியில் புரிந்துணர்வையும் தேசிய நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதே சிறந்தது. இதை விட்டுவிட்டு, அரசியல் இலாபம் கருதி அல்லது காட்டிக்கொடுக்கும் நோக்குடன் சமூகங்களுக்கு மத்தியில் இவ்வாறான செயல்களை யாராவது செய்வார்களேயானால், அது மன்னிக்க முடியாத பாரிய குற்றமாகும் என நான் கருதுகிறேன்.

   எனவே, குறுகிய நோக்கங்களை மனதிலிருந்து அகற்றி, தேசிய நல்லிணக்கத்திற்காக சாதி, சமய, கட்சி பேதங்களை மறந்து  அனைவரும் ஒத்துழைக்க முன்வர வேண்டும். அத்துடன், கட்சி பேதங்களை மறந்து நாட்டைக் கட்டியெழுப்பவும் முன்வர வேண்டும்  என்றார்.   

இதேவேளை, முஸ்லிம்களுக்குச்  சொந்தமான நான்கு கடைகள் முற்றிலும் தீக்கிரையானதையடுத்து, பெரும்பான்மை இனத்தவரின் அருகாமையில் இருந்த கடையொன்றும் எரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

( ஐ. ஏ. காதிர் கான் )

2 comments:

  1. First of all you follow whatever you are telling to others.
    You are one of Shameful Muslims politician of Sri Lanka.

    This fire could be a plan of your party and you even......Or Using this opportunity to get popularity.
    What make you so rush to see the incident?
    Do you know it before it going to happen?
    POLITICS , Natural or Setup incident ….
    Will wait and see.

    ReplyDelete
  2. What TrueF says: (26 November 2018 at 08:32) and Dema Hom says: (26 November 2018 at 10:26) is the "TRUTH and nothing but the Truth" about FAIZER MUSTHAPA. tHIS mUSLIM POLITICIAN IS ONE OF THE MOST "deceptive AND hoodwinking" MULSIM POLITICIAN THE MUSLIM cOMMUNITY HAVE EVER SEEN.
    We Muslims cannot "FORGET" the deception made by Faizer Musthapa during the burning of a garments outlet in Mahagama, the Bathiya Mosque incident, the Dambulla Mosque incident, the Aluthgama/Beruwela incidents and the Kesalwatha Muslim Roits incident. All what he told the Muslim Community were "BLADY LIES". This fellow knows that he will NOT get elected by the MUSLIM VOTES in the next general elections, so he is working a "STRTERGY" to please MY3 and Mahinda Rajapaksa to get a slot in the National List MP position in the forthcoming general elections.
    Hon. Mahinda Rajapaksa, Hon. Basil Rajapaksa and the JO/SLPP are well informed of Faizer Musthapa's treachy and TRICKS. God AllMighty Allah will NEVER give this fellow another opprtunity to become a "NOMINATED OR ELECTED MP" and the Muslims should pray (ask DUA") from God AllMighty Allah NOT to bring him back to parliament, instaed a "NEW, YOUNG, HONEST, NO-DECEPTIVE, DILIGENT MUSLIM YOUTH" should be snet to parliament/elected in his place at the NEXT general elections, Insha Allah.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.