Header Ads



ஆபிரஹாம் சுமந்திரனிடம் சில கேள்விகள், இது துரோகம் இல்லையா...?

சுவைர் மீரான்  (யாழ்ப்பாணம்)

இலங்கையின் தேசிய அரசியலில் ஏற்பட்ட திடீர் அரசியல் மாற்றங்களை தொடர்ந்து எதிர்பாராத பல திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. கட்சி மற்றும் அணி மாறல்கள், ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்துவது, இரகசியங்களை வெளிப்படுத்துவது என்று பல வகையான நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. சுமந்திரனின் கட்சியின் உறுப்பினர் ஒருவரே கட்சியின் முடிவை மதிக்காமல் அணி மாறிச் சென்று மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு வழங்கி இருக்கின்றார். இவ்வளவும் ஒருபுறம் நடைபெற, மறுபுறம் வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் இளைஞர், மகளீர் மாநாட்டில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் திரு. ஆபிரகாம் சுமந்திரன் அவர்கள் நாட்டின் ஜனாதிபதியை கடுமையான வார்த்தைகளால் சாடியிருப்பதை ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகின்றது. இந்நிலையில் அவரை நோக்கி சில முக்கிய கேள்விகளை முன்வைக்க வேண்டியுள்ளது.

கெளரவ ஆபிரஹாம் சுமந்திரன் அவர்களே, 

இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியாக தொழிற்பட்ட உங்கள் கட்சி, உங்களதும், ரணில் விக்கிரமசிங்கவினதும் ரோயல் கல்லூரியின் இன்னொரு பழைய மாணவரான அர்ஜுன மகேந்திரன் இலங்கைப் பொருளாதாரத்தின் முக்கிய இடத்திலேயே மோசடி செய்து பெரும்தொகைப் பணத்தை திருடிய பொழுது, தீர்மானிக்கும் சக்தி, முக்கிய எதிர்க்கட்சி என்றெல்லாம் சொல்லிக்கொள்ளும் உங்களது கட்சி என்ன செய்தது? ஒரு ஆர்ப்பாட்டத்தையாவது முன்னெடுத்ததா? 

ஜனநாயகம் குறித்து பேசும் நீங்கள், எதிர்க்கட்சி என்ற வகையில் நாட்டு மக்களின் எந்தப் பிரச்சினை குறித்து தேசிய அளவில் பேசி இருக்கின்றீர்கள்? நீங்கள் கடந்த மூன்று வருடங்களுக்கும் மேற்பட்ட காலப்பகுதியில் ரணில் விக்ரமசிங்க அரசை பாதுகாக்கும் வேலைகளை மட்டுமே செய்து வந்தீர்களே தவிர நாட்டு மக்களின் நலனுக்காக மட்டுமல்ல, தமிழ் மக்களிற்காகக் கூட உருப்படியாக குரல்கொடுக்கக் கூட இல்லை.

நீங்கள் எதிர்க்கட்சி என்ற வகையில் எதுவுமே செய்யாமல், வெறுமனே அரசை பாதுகாக்க பாடுபட்ட காரணத்தால் தானே, "எதிர்க்கட்சிக்கான" வெற்றிடத்தை மஹிந்த ராஜபக்ச தரப்பினர் சிறப்பாக பயன்படுத்தி, வெற்றிகரமாக தம்மை மீண்டும் தேசிய அரசியலில் மாபெரும் சக்தியாக நிலைநிறுத்த முடிந்தது?

அரசிற்கு எதிராக கொண்டுவரப் பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் பொழுது அரசிற்கு எதிராக வாக்களித்து இருக்க வேண்டிய எதிர்க்கட்சியான நீங்கள், குறைந்த பட்சம் வாக்களிப்பை தவிர்க்கக் கூட முயலாமல், அரசிற்கு ஆதரவாக வாக்களித்து நாட்டின் ஜனநாயக விழுமியங்களையே கேலிக்கூத்தாக ஆக்கினீர்கள்.

இவ்வளவுடன் முக்கியமான இரண்டு கேள்விகளை உங்கள் முன் வைக்கின்றேன்.

மைத்திரி, ரணில் அரசுடன் கொஞ்சிக் குலாவிக்கொண்டு இருந்த உங்களால் எந்த ஒரு தமிழ் அரசியல் கைதியையும் விடுதலை செய்ய முடியாமல் போனதே? வேறு எதோ ஒரு (ஊழல்) குற்றச்சாட்டிற்காக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நாமல் ராஜபக்ச, அந்தக் குறுகிய காலத்தில் ஏற்பட்ட நட்பு, அனுபவம் ஆகியவற்றின் காரணமாக, தனது தந்தை பிரதமராக சத்தியப் பிரமாணம் செய்த பின்னர் செய்த முதல் காரியமாக சிறைக்குச் சென்று தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்ததுடன், அதனைத் தொடர்ந்து அனைத்துக் கைதிகளும் விடுதலையாவதற்கான உத்தரவை தனது தந்தை மூலமாக முன்வைத்து ஜனாதிபதி மூலமாக செயற்படுத்த தயாராகிவிட்டார். இதனை இவ்வளவு காலமும் ஏன் உங்களால் செய்ய முடியாமல் இருந்தது? தானாடாவிட்டாலும் தசையாடும் என்பது உங்களுக்கு பொருந்தாமல் இருக்கின்றதே? அந்த அரசியல் கைதிகளை காரணமாக வைத்து தேர்தலிகளில் அந்தக் குடும்பங்களை பயன்படுத்திக்கொள்ள முயன்றதுதான் காரணமா?

NFGG - நல்லாட்சிக்கான தேசிய முன்னணி எனும் கட்சியை உங்களுக்கு மறந்து இருக்காது. அந்த கட்சி கடந்த வடமாகாண சபைத் தேர்தலில் உங்களது கட்சியுடன் ஒப்பந்தம் செய்து, அதன் பயனாக அய்யூப் அஸ்மின் அவர்களை போனஸ் உறுப்பினராகப் பெற்றது. அந்தக் கட்சியின் அரசியல் உயர்பீடம் கூடி, அந்த கட்சியின் கொள்கைக்கு ஏற்ப அய்யூப் அஸ்மின் அவர்களை ராஜினாமா செய்யும்படி கேட்டபொழுது, அதனை நிராகரித்து குறித்த உறுப்பினரை உங்கள் கட்சியில் இணைத்துக் கொண்டதுடன், அவரை உங்களது அரசியல் உதவியாளராகவும் பயன்படுத்தி வருகின்றீர்களே, இது துரோகம் இல்லையா?

வடமாகாண சபையின் வளங்கள், காலங்கள், நேரங்களை எல்லாம் உங்கள் கட்சி சொந்தப் பிரச்சினைகள், பிரிவினைகள், துரோகங்களை பற்றி கணக்குத் தீர்த்துக் கொள்வதற்கு பயன்படுத்தி மக்களை ஏமாற்றியது குறித்துக் கூட பேச விரும்பவில்லை, அத்துடன் இதற்கு மேல் உங்களிடம் எதனையும் கேட்கவும் விரும்பவில்லை.

9 comments:

  1. நீங்க கேட்டாப்பொல அவங்க சொல்லிடத்தான் போறாங்களா. போய் உங்கட வேலையைப் பாருங்க ஐயா.

    ReplyDelete
  2. எதை கொண்டு வந்து எதற்குள் முடிச்சு போடுறீங்க சுவைர்மீரான். நானும் என்னமோ ஏதோ என்று வாசித்தும் விட்டேன்..

    ReplyDelete
  3. சுவையர் மீரான், மைத்திரிக்கு கால் அமுக்கிவிட புதுசா வேலைக்கு சேர்ந்துள்ளார் போல

    ReplyDelete
  4. இதுக்கெல்லாம் பதில் சொல்லத் தெரிஞ்சா அந்த ஆள் எப்பிடி காற்சட்டை போட்டுக்கொண்டு பாராளுமன்றத்தில் இருக்க போகின்றார்?
    அவர் தனது மக்களுக்கு ஒரு படம் காட்டி இருக்கிறார், அவ்வளவுதான்.

    ReplyDelete
  5. சபாஸ் மீரா
    நச்சின்டு நாலு கேள்வி கேட்டிங்க

    ReplyDelete
  6. Ajan, ஏற்கனவே சுமந்திரனும், கூட்டமைப்பும் ரணிலுக்கு நன்றாக கால் அமுக்கி விடுகின்றார்கள்.

    ReplyDelete
  7. திரு ஆபிரஹாம் சுத்துமாத்து அவர்களே,

    ரணிலின் கூட்டாளி (அதுதான் உங்களது பள்ளிக்கூட பழைய மானவராமே?) அர்ஜுன மத்திய வங்கியையே கொள்ளையடித்த பொழுது உங்கள் கட்சி என்ன செய்தது? ரணிலுக்கு கால் பிடித்து விட்டதா?

    இதையெல்லாம் விட முக்கிய கேள்வி, ரணில் பதவியில் இருந்த பொழுது ஏன் உங்களால் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய உரிய வேலைகளை செய்ய முடியாமல் போனது?

    நாமல் ராஜபக்சவிற்கு நான்கு நாளில் முடியும் என்றால், நான்கு வருடங்களாக தமிழரின் தலையில் மிளகாய் அரைத்தீர்களா?

    தமிழ் மக்கள் இனியும் இவர்களிடம் ஏமாறக் கூடாது.

    ReplyDelete
  8. சம்பந்தன் செய்த மிகப்பெரிய தவறு விக்னேஸ்வரனை கொண்டுவந்தது அல்ல, இந்த சுத்துமாத்திரனை கட்சிக்குள் கொண்டு வந்ததுதான்.

    ReplyDelete
  9. தனில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவில்லை என்பதற்காக மைத்திரியை பார்த்து இப்படி கத்தி இருக்கின்றாரா? இல்லையே?
    தனது நண்பருக்கு பதவி போய்விட்டது என்பதற்காகத்தானே இப்படி கத்தி இருக்கின்றார் சுத்துமாத்து.

    ReplyDelete

Powered by Blogger.