Header Ads



கொந்தளிப்புகளிடையே ரணிலும், மைத்திரியும் இன்றிரவு சந்திக்கிறார்கள்...?

சமகாலத்தில் தம்மை எதிரிகளாக அடையாளப்படுத்திக் கொண்டுள்ள ஜனாதிபதி மற்றும் ஐக்கிய தேசிய கட்சித் தலைவருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

இலங்கையின் மோசமான நிலைமை சர்வதேச வரை வியாபித்து பல்வேறு நெருக்கடிகள் தலைதூக்கியுள்ள நிலையில், மைத்திரி - ரணில் நேரடியாக சந்திக்கவுள்ளனர்.

தீர்மானமிக்க இந்த சந்திப்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பதவி கவிழ்க்கப்பட்ட ரணில் விக்கரமசிங்க, சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த சந்திப்பு இன்றிரவு இடம்பெறவுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சந்திப்பில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதானிகள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியினால் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க, பலவந்தமாக பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் இதுவரை ரணில் மற்றும் மைத்திரி சந்தித்து கொள்ளவில்லை.

அதற்கமைய இன்று நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பிலும் எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கை தொடர்பிலும் கலந்துரையாடல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகரினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. ஆட்டுவித்தான் யாரொருவன் ஆடாதேடா கண்ணா. அவர் நடத்தும் நாடகத்தில் மைத்திரியும் உண்டு.

    ReplyDelete
  2. ஐயா my3 இப்போதும் ஒன்றும் கெட்டு விடவில்லை நீங்கள் நியமித்த பின் வழி நாயகனை நீக்கிவிட்டு சொரனை கெட்ட தலைவருக்கே பதவியை கொடுத்து விடுங்கள் சர்வதேசத்துக்கு முன்னால் தாய் நாட்டை தலை நிமிர செய்யுங்கள் 2019 க்கான வரவு செலவு திட்டத்தின் போது பணத்தை கொண்டோ பதவியை கொண்டோ மிரட்டியோ உங்கள் பக்கத்திற்கு2/3 எடுத்தால் உங்கள் ஆசை தீரும் மனநோய் குணமாகும்

    ReplyDelete

Powered by Blogger.