Header Ads



மைதிரிபாலவிடம், சுமந்திரன் மன்னிப்புக் கேட்க வேண்டும்

- வ.ஐ.ச.ஜெயபாலன்-

கெளரவ நாடாளுமன்ற உறுப்பினர் திரு எம்.எ.சுமந்திரன் அவர்கள் தனது புதிய பகைவர்களுக்கு எதிராக கெட்டவார்த்தைகளை பயன்படுத்துவதக்கு கூட்டமைப்பு மேடைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனேனில் இது தமிழர் கலாசாரல்ல. மேலும் இது தமிழர் நலன்களைப் பாதிக்கும். 
.
வவுனியாவில் நீங்கள் திரு.மைதிரிபால சிறிசேனவுக்கு எதிராக கெட்ட வார்த்தை பேசியமைக்கு மன்னிப்புக் கோருமாறு வேண்டுகிறேன். என்ன இருந்தாலும் அவர் சிங்கள மக்களின் தலைவர் ஆவார். இது எங்கள் மகத்தான தமிழ் கலாச்சாரத்துக்கும் தமிழர் நலன்களுக்கும் உகந்ததல்ல.
.
மதிப்புக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சுமந்திரன் அவர்களே, நீங்கள் திரு ரணில் விக்கிரசிங்க அவர்களை பாதுகாக்க வவுனியாவில் ஆவேசப்பட்ட அளவுக்கு கோவத்தை இதுவரைக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற தமிழர் உரிமைப் பிரச்சினைகளில் காட்டியதில்லையே? அது ஏன்? 
.
தமிழர் நலன்களைப் பணயம் வைத்து போருக்கு அறைகூவி திரு.ரணில் அவர்களைப் பாதுகாக்கும் அளவுக்கு அவர் தமிழருக்கு தந்த உரிமைகள் எவை? இன்றைய பிரச்சினையில் அவர் தமிழர் விடுதலைக் கூட்டமைப்புக்கு எழுத்தில் தந்த வாக்குறுதிகள் எவை? தயவு செய்து அவற்றை பகீரங்க படுத்துங்கள். நிபந்தனையில்லாமல் திரு.மைதிரிபால சிறீசேனவை மட்டுமல்ல திரு.ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதற்க்கும் உங்களுக்கு தமிழ் மக்கள் ஆணையில்லை. மேலும் அது உரிமைக்குப் போராடும் தமிழரின் மகத்தான அரசியலுமல்ல.
.
சமாதானப் பேச்சுவார்த்தை காலத்தின் முன்பிருந்தே திரு ரணில் விக்கிரமசிங்க அவர்களை இலங்கை தமிழர்கள் அறிவார்கள். அவரிடம் தற்போது ஏற்பட்டிருக்கும் மனமாற்றம் என்ன? தமிழரின் ஆதரவைப் பெறுவதற்க்காக புதிதாக விட்டுத் தந்தத உரிமைகள் சலுகைகள் எவை? மேலும் அவர் அரசியல் கைதிகள் விடுதலை, நிலம் நீர்போன்ற நமது மக்களின் வாழ்வாதரங்களை இராணுவத்தின் பிடியில் இருந்து விடுவித்தல், பொதுப்பட்டியைல் இருக்கும் அம்சங்களையாவது மாநில அரசுக்கு விட்டுகொடுத்தல், ஏற்கனனவே வாக்களித்த இணைப்பாட்சி அரசியல் சட்டத்தை நிறைவேற நடவடிக்கை எடுத்தல் போன்ற தமிழர்களின் மிகக் குறைந்த பட்டசக் கோரிக்கைகளில் எதையாவது திரு ரணில் விக்கிரமசிங்க அவர்க்ள் .எழுத்துமூலம் ஏற்றுக் கொண்டிருக்கிறாரா?

திரு.ரணில் விக்கிரமசிங்க அவர்களை ஆதரிப்பதற்க்கு நிபந்தனையாக நீங்கள்  அவரிடமிருந்து எழுத்துமூலம் பெற்ற வாக்குறுதிகளை உடனே வெளியிடுங்கள்.

3 comments:

  1. சுமந்திரன் தமிழர்களிடம் மன்னிப்புக் கேட்பதுடன், அரசியலில் இருந்து முற்றாக ஒதுங்கிக்கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  2. நியாயமான கேள்விகள் ஐயா..

    ReplyDelete
  3. சுமந்திரன் தமிழ் மக்களை பக்காவாக ஏமாற்றுகின்றார் என்பது எமக்கே புரிகின்றது.

    ReplyDelete

Powered by Blogger.