Header Ads



இலங்கை இராணுவத்தில், அசானின் அபாறத் திறமை


நடைபெற்று முடிந்த இலங்கை இராணுவத்தின் 55வது இராணுவ மெய்வல்லுனர் போட்டியில் கிழக்கு மாகாணத்திலிருந்து பங்கு பற்றியவர்களில் நிந்தவூர் லகான் விளையாட்டுக் கழக வீரர் எம்.ஐ.எம். அசான் 10 அம்சப் போட்டிகளில் பங்கு பற்றி 6706 புள்ளிகளைப் பெற்று யாராலும் சாதிக்க முடியாத சாதனையை நிகழ்த்தி தனது ஊரான நிந்தவூரிற்கும், தான் அங்கத்துவம் வகிக்கும் கழகத்திற்கும் பெருமை சேர்த்துக் கொடுத்துள்ளார். 

இராணுவ இயந்திரவியல் மற்றும் பொறியியல் படைப்பிரிவைச் சேர்ந்த அசான் கீழ்வரும் போட்டிகளில் கலந்து கொண்டு சாதனையைப் படைத்துள்ளார்.

அந்தவகையில் 
முதலிடம் பெற்ற நிகழ்ச்சிகள் :
1. குண்டுபோடுதல்
2. 1500 மீற்றர் ஓட்டம்
3. பரிதுவட்டம் வீசுதல்
4. உயரம் பாய்தல்

இரண்டாம் இடம் பெற்ற நிகழ்ச்சிகள் :
1. நீளம்பாய்தல்
2. கோலூன்றிப்பாய்தல்

மூன்றாமிடம் பெற்ற நிகழ்ச்சிகள்
1. 100 மீற்றர் ஓட்டம்
2. 400 மீற்றர் ஓட்டம்
3. 110 மீற்றர் சட்ட வேலி ஓட்டம்

ஐந்தாமிடம் பெற்ற நிகழ்ச்சி
ஈட்டி எறிதல் போன்ற நிகழ்ச்சியிலும் பங்குபற்றி தனது பெயரை தேசிய ரீதியில் பதித்துக் கொண்டார்.

அசானின் பயணங்கள் இன்னும் தொடரட்டும்.

(சுலைமான் றாபி)

1 comment:

Powered by Blogger.