Header Ads



மகிந்த அணி, சபாநாயகருக்கு அஞ்சுகிறதா...?

இன்றைய -27- நாடாளுமன்ற அமர்வினை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி புறக்கணிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சபாநாயகரின் அதிரடியான செயற்பாடுகளை எதிர்கொள்ள முடியாத நிலையில் இவ்வாறான நிலைப்பாட்டுக்கு மஹிந்த அணியினர் வந்துள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் யாப்புக்கு அமைவாகவும் நிலையியற் கட்டளைகளின் கீழ், நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய சபாநாயகர் செயற்படும் வரை அவருக்கு ஒத்துழைப்பு வழங்க போவதில்லை என அந்தக் கட்யினர் அறிவித்துள்ளனர்.

இவ்வாறான நெருக்கடி குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தைகள் நடத்திய போதிலும் இன்னும் இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை என, நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

மைத்திரி - மஹிந்த தலைமையிலான குழுவினர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

இந்நிலையில் நாடாளுமன்றில் பெரும்பான்மையை கொண்டிராத ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவாக சபாநாயகர் செயற்படவில்லை என்பது அந்தக் கட்சியின் குற்றச்சாட்டாகும்.

ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவரான சபாநாயகர் கரு ஜயசூரிய, ரணில் தரப்புக்கு ஆதரவு வழங்கும் வகையில் அவரின் செயற்பாடு அமைந்துள்ளதாக மஹிந்த தரப்பு குறை கூறுகிறது.

இந்நிலையில் நாடாமன்றிலிருந்து சபாநாயகரை வெளியேற்றும் செயற்பாடுகளை திரைமறைவில் மஹிந்த தரப்பு மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறான சூழ்நிலையில் இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது சபை நடவடிக்கையை புறக்கணித்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.