Header Ads



8.000 மாற்றுமத சகோதரர்களுடனும், 2.000 முஸ்லிம்களுடனும் இயங்கும் நோலிமிட்


நோலிமிட் நிறுவனத்தின் முன்மாதிரி

காத்தான்குடியை பிறப்பிடமாகக்  கொண்ட நோலிமிட் முபாறக்ஹாஜியார் 

அவர்களால் மேற்கொள்ளப்படும் எமக்கு தெரிந்த சில பணிகள்!

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு வெளியிடங்களில் இருந்து செல்லும் மக்களுக்கு தங்குமிட, சாப்பாட்டு, தொழுகைக்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நோன்பு முப்பது நாளும் அவரின் தலைமைக் காரியாலயத்தில் காணப்படும் பள்ளியில் எல்லோருக்கும் நோன்பு திறக்க வைக்கிறார்.

அந்தப் பள்ளியில் நோலிமிட் உரிமையாளர் இகாமத் சொல்கிறார்.

பிள்ளைகளை ஹாபிழ்களாக்கி இருக்கிறார்.

வீட்டில் தோட்டம் செய்கிறார்.

எந்த முகாமைத்துவ நிகழ்விலும் கோட் சூட்டுடன் வந்து கதையளப்பது கிடையாது.

அவரின் பொருளாதாரம் எரிக்கப்பட்ட போது, இறைவனிடம் சாட்டி விட்டு இன்று மென்மேலும் வளர்ச்சி அடைந்து இருக்கிறார்.

ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பளிக்கிறார்.

இனமத போதமின்றி தொழில் வாய்ப்பு.

ஒவ்வொரு நோலிமிட் கிளைகளிலும் தொழுகை அறை.

வர்த்தகத்தில் கொள்ளை இலாபம் ஈட்டுவது கிடையாது.

ஏனைய வியாபாரிகளும் நன்றாக இருக்க வேண்டும் என்ற பெருமனதோடு இருக்கிறார்.

ஒவ்வொரு வருடமும் பல இலட்சமென எமதூர் நிறுவனத்திற்கு சக்காத் உதவி.

இவ்வாறு எமக்கு தெரிந்தவை சிலதுகள் ஆகும்.

எமக்கு தெரியாமல் அவர்கள் மேற்கொள்ளும் பணிகள் எத்தனையோ இருக்கலாம்.

கீழ் உள்ள புகைப்படத்தில் வெள்ளை நிற உடையுடன் காட்சி தருபவர் நோலிமிட் நிறுவனத்தின் உரிமையாளர் முபாறக் ஹாஜியார் ஆவார்.

நீல நிரத்தில் அவருடன் புகைப்படத்தில் இணைந்துள்ளவர் நோலிமிட் நிறுவனத்தின் கடமை புரியும் தமிழ்,முஸ்லிம்,சிங்கள மதத்தை சேர்ந்த ஊழியர்கள்.

இந்த நாட்டுக்கும், எமது மண்ணுக்கும் பெறுமையை வேண்டித் தந்த முபாறக் ஹாஜியார் அவர்களின் பொருளாதரத்தை  இறைவன் மென்மேலும் வளர்ச்சி அடைய செய்வானாக!

முஹம்மட் பர்சாத்

12 comments:

Powered by Blogger.