Header Ads



''என் இத­யத்தைக், கூறு­போட்­டதைப் போல் உணர்­கிறேன்" யெமன் போரில் பட்டினியால் உயிரிழந்த 7 வயது சிறு­மி


யெமன் போரில் பட்­டி­னியால் உயி­ரி­ழந்த 7 வயது சிறு­மியின் புகைப்­படம் உல­கத்தின் கவ­னத்தை ஈர்த்து அனை­வ­ரையும் கண்­க­லங்க வைத்­துள்­ளது.

சவூதி அரே­பியா தொடர்ந்து ஹூதி கிளர்ச்­சி­யா­ளர்கள் மீது குறி­வைத்து யெமனில் தாக்­குதல் நடத்தி வரு­கி­றது. இந்­நி­லையில் யெமனில் உள் நாட்டுப் போர் நடை­பெற்ற இரண்டு வரு­டங்­களில் சுமார் 3 இலட்­சத்­துக்கு அதி­க­மான குழந்­தைகள் பிறந்­துள்­ளனர். அவர்கள் ஒவ்­வொரு நாளும் பசி, வன்­முறை தாக்­கு­தலை எதிர்­கொண்டு வரு­கின்­றனர்.

5,000க்கும் மேற்­பட்டோர் இந்த போர் காலங்­களில் இறந்­தி­ருக்­கலாம் அல்­லது காயம் அடைந்­தி­ருக்­கலாம். யெமனின் ஒட்­டு­மொத்த இளம் தலை­மு­றையும் வறு­மை­யிலும், வன்­மு­றை­யிலும் வளர்­கின்­றனர் என்று ஐ.நா. வேதனை தெரி­வித்­தி­ருந்­தது.

இந்­நி­லையில் அக­திகள் முகாமில் இருந்த அமல் ஹுசேன் என்னும் 7 வயது சிறுமி பட்­டி­னியால் பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்தார். முன்­ன­தாக 'நியூயோர்க் டைம்ஸ்' பத்­தி­ரிகை, எலும்பும் தோலுமாய் ஒட்­டிக்­கி­டக்கும் சரு­மத்­தோடு இருக்கும் அமலின் புகைப்­ப­டத்தை வெளி­யிட்­டது. அது உலக நாடு­களின் கவ­னத்தை ஈர்த்­தது. யெமனில் உள்­நாட்டுப் போரை முடி­வுக்குக் கொண்டு வர வேண்டும் என்று பல்­வேறு நாடு­களும் வலி­யு­றுத்­தின.

இந்­நி­லையில் அமல் ஹுசேன் பட்­டி­னியால் பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்தார். சத்துக் குறை­பாட்டின் கார­ண­மாக அவர் உயி­ரி­ழந்­த­தாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அவரின் தாய் மரியம் அலி, ''என் இத­யத்தைக் கூறு­போட்­டதைப் போல் உணர்­கிறேன். அமல் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பாள். இப்போது என்னுடைய மற்ற குழந்தைகளை நினைத்தால் கவலையாக இருக்கிறது'' என்றார்.

 M.I.Abdul Nazar


1 comment:

  1. கடந்த ஆட்சியில் கஷ்டங்கள் இருந்தாலும் ஏதோ ஒரு வகையில் நிம்மதியாக வாழ்ந்த சுன்னி,ஷீயா மக்கள் ஈரானிய ஆதிக்க ஆட்சி மாற்றுகிறேன் பேர்வழிகளால் சீரழிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதே நிலைமை சவூதியிலும் நடக்க வேண்டுமா? மை டியர் ஈரான் நக்கீஸ்

    ReplyDelete

Powered by Blogger.