Header Ads



இலங்கைக்கு 72 ஆயிரம் கோடி ரூபா பொருளாதார இழப்பு - ஜனாதிபதி மாத்திரமே பொறுப்பு


ஜனாதிபதியின் தூர நோக்கமற்ற செயற்பாட்டின் காரணமாக இன்று நாடு பாரிய பொருளாதார நெருக்கடியினை சந்தித்துள்ளதாக தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்தன, கடந்த மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் தற்போது வரையான காலப் பகுதி வரை ஏற்பட்ட அரசியல் நெருக்கடி காரணமாக 72 ஆயிரம் கோடி ரூபா பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும்  புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் சர்வாதிகார செயற்பாடுகளினை எதிர்க்கும் விதமாகவே  ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின்  உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளனர்.

நாட்டின் ஸ்தீரமற்ற தன்மைக்கும், பொருளாதார நெருக்கடிகளுக்கும், சர்வதேசத்தின் அழுத்தத்திற்கும் ஜனாதிபதி மாத்திரமே பொறுப்பு கூற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.