Header Ads



5 இராஜதந்திரிகள் மாத்திரம், தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர்

தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் அரசியலமைப்பு விவகாரங்கள் குறித்து நான்கு ஐந்து இராஜதந்திரிகள் மாத்திரம் தேவையற்ற குழப்பங்களை  ஏற்படுத்துகின்றனர் என ஸ்ரீலங்கா மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

 வெளிநாட்டு செய்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த  ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை எந்த ஒரு நாடும் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியபோது மைத்திரிபால சிறிசேன,  “நான்கு அல்லது ஐந்து இராஜதந்திரிகள் மாத்திரம் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர். ஏனையோர் அமைதியாக இருக்கின்றனர்“ என்று பதிலளித்துள்ளார்.

சட்டபூர்வமான பிரதமர் கூறிக் கொள்ளும் ரணில் விக்கிரமசிங்க பொருளாதார சபை ஊடாக தன்னிச்சையான முடிவுகள் எடுத்திருந்தார் என்றும்,  காணிகள் உள்ளிட்ட அரச வளங்களை வெளிநாட்டவர்களுக்கு மிகக்குறைந்த விலையில் விற்பனை செய்தார் என்றும் இந்த சந்திப்பின் போது மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

முன்னாள் சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க சில முக்கிய வழக்குகளின் போது, காவல்துறையினரின் விசாரணைகளில் தலையீடு செய்தார் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.