Header Ads



பல்டியடிக்க 3 மில்லியன் பேரம் பேசிய விவகாரம் : யோஷித்தவால் மங்களவிற்கு பதில்

ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினரை விலைக்கு வாங்குவதற்கு யோஷித்த  ராஜபக்ஷ தலைமை தாங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவின் டுவிட்டுக்கு யோஷித்த பதில் டுவிட்டியுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு பாராளுமன்றில் 113 பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் திங்கட்கிழமை வரை கால அவகாசம் வழங்கியுள்ளதாகவும் அதற்காக ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஒருவரை விலைக்கு வாங்குவதற்காக 3 மில்லியன் டொலர் வரை பேரம் பேசப்பட்டுள்ளதாக மங்கள தனது உத்தியோக பூர்வ டுவிட்டர் பக்கத்தில் டுவிட்டியிருந்தார்.

மேலும் மங்கள தனது டுவிட்டில் குறித்த பேரம் பேசும் நடவடிக்கை யோஷித்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறுவதாகவும், ராஜபக்ஷக்களின் இச் செயற்பாடு குறித்து வெட்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் மங்களவின் குற்றச்சாட்டை மறுத்து யோஷித்தவும் பதில் டுவிட் செய்துள்ளார்.

“நான் தற்போது இடம்பெற்று வரும் ரக்பி தொடரிலேயே எனது முழு அவதானத்தையும் செலுத்தியுள்ளேன். உண்மையாகவே இந்த பேரம் பேசும் செயல்களுக்கு எனக்கு நேரமில்லை, அதனால் என் பெயரை இந்த அரசியலுக்குள் இழுக்க வேண்டாம்” என டுவிட்டியுள்ளார்.


No comments

Powered by Blogger.