Header Ads



மாவனல்லையில் முஸ்லிம் மீடியா போரம் நடாத்தும், 2 ஊடக செயலமர்வுகள்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் நடாத்தும் இரு ஊடக செயலமர்வுகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 01ம் திகதி சனிக்கிழமை மாவனல்லையில் இடம்பெறவுள்ளது.

இதற்கமைய மாவனல்லை ஆயிஷா சித்தீக்கா மாணவிகளுக்கான செயலமர்வு ஆயிஷா சித்தீக்கா பெண்கள் கலாசாலையிலும் மற்றும் மாவனல்லை வலய தமிழ் மொழி மூல பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான செயலமர்வு சாஹிரா கல்லூரி பழைய மாணவர் ஊடக சங்கத்துடன் இணைந்து  சாஹிரா ஆரம்ப வித்தியாலய கேட்போர் கூடத்திலும் இடம்பெறவுள்ளது. 

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் இடம்பெறவுள்ள முஸ்லிம் மீடியா போரத்தின் 61 மற்றும் 62 வது செயலமர்வுகளில் நாட்டில் அனுபவம் வாய்ந்த முன்னணி  ஊடகவியலாளர்களால் பயிற்சிகள் நடத்தப்படவுள்ளன.  

மேற்படி செயலமர்வுகளில் கலந்துகொள்ளும் மாணவ மாணவிகளுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் இரு அமர்வுகளாக இடம்பெறவுள்ளது. அதன்படி, ஆயிஷா சித்தீக்கா மாணவிகளுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் அன்றைய தினம் மாலை 03.00 மணிக்கும், சாஹிரா கல்லூரியில் இடம்பெற்ற செயலமர்வில் கலந்துகொள்ளும் மாணவ மாணவிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மாலை 04.00 மணிக்கும்  இடம்பெறவுள்ளது. இவ்வைபவங்களில் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர்சுஹைர் ஹம்தல்லாஹ் ஸைத் மற்றும் இலங்கையிலுள்ள சவுதி அரேபிய தூதரகத்தின் ஊடக மற்றும் இஸ்லாமிய விவகாரங்களுக்கு பொறுப்பாளர் அலி அல் உமரி ஆகியோர் பிரதம அதிதிகளாகவும் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகரின் பாரியார் திருமதி ரீஸா ஹமீதுல்லாஹ்  கௌரவ அதிதியாகவும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அதிதிகளாகவும் கலந்துகொள்ளவுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயலாளர் ஸாதிக் ஷிஹான் தெரிவித்தார். 

இதேவேளை, சாஹிரா கல்லூரியில் இடம்பெறும் நிகழ்வின் போது ஊடகத்துறை ஊடாக  கேகாலை மாவட்டத்துக்கு பெருமை சேர்த்த இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை மற்றும்  தென்றல் அலைவரிசை முன்னாள் பணிப்பளார் மர்ஹூம் நூரானியா ஹசன், சிரேஷ்ட ஊடகவியலார் மர்ஹூம் உயன்வத்தை ரம்ஜான், நவமணி பத்திரிகை பிரதம ஆசிரியர் கலாபூஷணம் என்.எம் அமீன், வசந்தம் செய்தி ஆசிரியர் சீத்தீக் ஹனீபா மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் அமீர் ஹுசைன் ஆகியோர் சாஹிரா கல்லூரி பழைய மாணவர் ஊடக சங்கத்தினரால் பாராட்டி கௌரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. அண்மையில் இலங்கை சிங்களப்பகுதிகளில் பணம் மேற்கொண்டேன். கண்டிக்குபோய் திகன சென்றேன். சிங்கள மக்கள் மத்தியில் வளரும் முஸ்லிம் விரோதப் போக்குக்கு பற்றி பேசினேன். சிங்களவர் பலர் தாங்கள் முஸ்லிம் கள்மீது அச்சத்துடன் வாழ்வதாக சொல்லபட்டது என்னை ஆர்ர்சரியபடுத்தியது. இஅவை பற்றி விரிவாக எழுத வேண்டும். எனினும் பொதுவாக முஸ்லிம்களுக்கு எதிரான அச்சத்துக்கு சிங்களத் தரப்பு சொல்லும் காரணம் ஆய்வுக்குரியது. இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் அதிகரித்துவரும் சூபிகளுக்கு எதிரான திவிரவாத போக்கும் விவாதங்க்களும் மோதல்களும் சர்வதேச முஸ்லிம் தீவிர வாதத்தின் அங்கம் என்றே பலர் கர்துகிறார்கள். தங்களை அச்சுறுத்துவதாக சிங்கள தரப்பில் சொல்லப்பட்டது. பொதுவாக சர்வதேச இஸ்லாமிய தீவிரவாதத்தின் அங்கமாக பார்த்து அஞ்சுகிறார்கள். இது உலகம் முழுவதும் முஸ்லிம்கள் சிறுபாண்மையாக வாழும் நாடுகளில் வளர்ந்துவரும் பொதுப்பிரச்சினைதான். சூபிகள் சரியா பிழையா என்பது எனக்கு தெரியாது. ஆனால் சூபிகளை பலகீனபடுத்திய நாடுகள் பலவற்றி முஸ்லிம்கள் சீர்குலைத வரலாறு தெரியும். என் அனுபவ அடிப்படையில் சொவதானால் உள் இன ஜனநாயகம் மட்டுமே முஸ்லிம்களை காக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.