Header Ads



2019 ம் ஆண்டிற்கான புதிய, மாணவர் பிரவேசப் பரீட்சை


நவீன கால சவால்களுக்கு முகம் கொடுக்கும் விதத்தில் ஆளுமையும் திறமையும் மிக்க இளம் உலமாக்களை உருவாக்குவதில் கூடுதல் கவனம் செலுத்தி வரும் எமது அல் ஜாமிஆ அர் ரஹ்மானிய்யஹ் கலாபீடமானது 2019ம் ஆண்டிற்கான புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான நேர்முக மற்றும் எழுத்து பரீட்சைகளை நடாத்த திட்டமிட்டுள்ளது. அல்ஹம்து லில்லாஹ். அதற்கமைவாக ஹிப்ளுப் பிரிவில் சேர விரும்பும் மாணவர்களுக்கான நேர்முகப் பரீட்சை இன்ஷா அள்ளாஹ் வரக்கூடிய டிசம்பர் மாதம் 02ம் திகதி (ஞாயிற்றுக் கிழமை) காலை 09.00 மணிக்கு கலாபீட வளாகத்தில் ஆரம்பமாகவுள்ளதுடன் ஷரீஆ பிரிவில் சேர விரும்பும் மாணவர்களுக்கான நேர்முகப் பரீட்சை இன்ஷா அள்ளாஹ் வரக்கூடிய டிசம்பர் மாதம் 15 திகதி (சனிக் கிழமை) காலை 09.00 மணிக்கு கலாபீட வளாகத்தில்  ஆரம்பமாகவுள்ளது.

நேர்முகப் பரீட்சைக்கு தோற்றுவதற்கான தகைமைகள்
ஷரீஆ பிரிவு:
நல்லொழுக்கமும் உடல் ஆரோக்கியமும் உள்ளவராக இருத்தல்.  
அல் குர்ஆனை பிழையின்றி, சரளமாக ஓதக்கூடியவராக இருத்தல். 
2018ம் கல்வியாண்டில் 10ம் தரத்திற்கு சித்தியடைந்தவராகவும் 16 வயதை தாண்டாதவராகவும்  இருத்தல். 

ஹிப்ளுப் பிரிவு:
நல்லொழுக்கமும் உடல் ஆரோக்கியமும் உள்ளவராக இருத்தல்.  
அல் குர்ஆனை பிழையின்றி, சரளமாக ஓதக்கூடியவராக இருத்தல்.  
2018ம் கல்வியாண்டில் 06ம் ஆண்டிற்கு சித்தியடைந்தவராகவும் 12 வயதை தாண்டாதவராகவும் இருத்தல்.

இதுவரை தமது விண்ணப்பப் படிவங்களை தயார் செய்து அனுப்ப தவறியோர் இங்கு இணைக்கப் பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் (Download) செய்து, பூர்த்தி செய்து குறித்த திகதியில் இடம்பெறவுள்ள நேர்முகப் பரீட்சைக்கு எடுத்து வருமாறு வேண்டப் படுகின்றீர்கள். 

குறிப்பு: 
(01) நேர்முகப் பரீட்சைக்கு சமூகம் தரவுள்ள அனைவரும் கீழே குறிப்பிடப் பட்டுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளுமாறு வேண்டப் படுகின்றீர்கள்.   
(02) நேர்முகப் பரீட்சையில் சித்தியடையும் பரீட்சார்த்திகள் மாத்திரமே தெரிவு செய்யப் படுவர்.
(03) எமது கலாபீட மாணவர்கள் ஹிப்ழு மற்றும் ஷரீஆ கற்கைநெறிகளை பூர்த்தி செய்வதுடன் கல்விப் பொது தராதர சாதாரண பரீட்சைக்கும் தோற்றுவிக்கப் படுகின்றனர். அரபு, உர்து பாஷைகளுக்கு மேலதிகமாக தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளும் கற்பிக்க படுவதுடன் கணனி அறிவும்  கலாசாலையில் போதிக்க படுகின்றது. 

மேலதிக தகவல்களுக்கு:
Jamia Rahmaniyyah (Arabic College)
Dunuwila Road,
Akurana.
T/P: 0812300578/ 0777447197.


No comments

Powered by Blogger.