Header Ads



ஜனவரி 1 ம் திகதிமுதல் ஒருபோதும் சந்திக்காத நெருக்கடி நிலைமைக்குள் தள்ளப்படுவோம்

இலங்கை பாரிய நெருக்கடி நிலைமைக்கு நாடு தள்ளப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று -23- இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

ஜனவரி முதலாம் திகதி முதல் நாங்கள் ஒருபோதும் சந்திக்காத நெருக்கடி நிலைமைக்குள் தள்ளப்படுவோம்.

டிசம்பர் 31ஆம் வரை தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ள போதும் அதன் பின்னர் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ள வேண்டுமென்றால் சட்ட பூர்வமான வரவு செலவு திட்டமோ அல்லது இடைக்கால கணக்கு அறிக்கையோ கொண்டு வரப்பட வேண்டும்.

இடைக்கால கணக்கு அறிக்கையை அமைச்சரவையில் நிறைவேற்றியுள்ளதாக கூறுகின்றனர். ஆனால் திருட்டு அமைச்சரவையில் அதனை நிறைவேற்றியுள்ளதாக அவர்கள் கூறினாலும் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் அதனை நிறைவேற்ற முடியாது என்பது உறுதியாகியுள்ளது.

இதனால் ஜனவரி 1ஆம் திகதி முதல் அரச ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாது. ஓய்வூதியதாரர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்க முடியாது. பிள்ளைகளுக்கான சீருடைகளை கொடுக்க முடியாத நிலைமை ஏற்படும்.

இதேவேளைஈ மைத்திரி -மஹிந்த கூட்டணியின் அரசியல் சூழ்ச்சியினால் ஆபத்து ஏற்படும் ஆபத்தை தடுக்க அரசியல் நெருக்கடி பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட் வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.