Header Ads



14 ஆம் திகதி என்ன நடக்கும்..? முழு உலகமும் அவதானிக்கிறது


இலங்கை நாடாளுமன்றத்தை எதிர்வரும் 14ஆம் திகதி கூட்டி, ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்க்காமல் மீண்டும் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்க தயாராகி வருவது தொடர்பில் வெளிநாட்டு ராஜதந்திர தரப்புகள் உன்னிப்பாக கவனம் செலுத்தி வருவதாக ராஜதந்திர தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனநாயகத்தை மதிக்கும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் மக்கள் பிரதிநிதிக்கு பிரதமர் பதவியை வழங்கி, இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு உடனடியாக தீர்வுகாண வேண்டும் என்பதே வெளிநாட்டு ராஜதந்திரிகளின் நிலைப்பாடாக இருந்து வருகிறது.

அத்துடன் அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் வகையில் தொடர்ந்தும் செயற்பட்டால், இலங்கை சம்பந்தமாக பாரதூரமான முடிவுகளை எடுக்க வெளிநாடுகள் தீர்மானித்துள்ளதாக பேசப்படுகிறது.

ஜனநாயகம் பாதுகாப்பாக இருந்த ஒரு நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி தவறான முன்னுதாரணம் எனவும் மக்கள் மற்றும் அரசு இடையில் இருக்கும் அடிப்படை உடன்படிக்கையான அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவது நாகரீகமான சமூகத்தின் அடையாளம் அல்ல எனவும் ராஜதந்திரிகள் கருதுவதாக கூறப்படுகிறது.

அத்துடன் நாட்டில் அரசியல் நெருக்கடி ஏற்படும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தினால், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான நடவடிக்கைகள் உட்பட நல்லிணக்க செயற்பாடுகளும் நெருக்கடிக்கு உள்ளாகும் ஆபத்து குறித்து ராஜதந்திரிகள் கவனம் செலுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக பல நாடுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெளிவுப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி அவற்றை கவனத்தில் கொள்ளாதது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தெரியவருகிறது.

எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றத்தின் வழமையான நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர், நிலையியல் கட்டளை சட்டத்தை இடைநிறுத்தி நிலையான அரசாங்கம் ஏற்படுத்த பெரும்பான்மை உறுப்பினர்களின் நிலைப்பாட்டை வெளியிட சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து ராஜதந்திர தரப்பினர் கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

1 comment:

  1. MR is the choice at this time
    RW is not a good leader
    Best example is digana Burnings and attacks ( RW slept for 3 days while DIGANA mosque and houses were burning ,Bro Anver manathunga had a picketing and waked up him )
    Also MR is not a best choice ( for the time being ok as there is no more choice at this moment )
    number of incidence is 467-465=2

    ReplyDelete

Powered by Blogger.