Header Ads



மகிந்தவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் - 14 ம் திகதி வாக்கெடுப்பு - சபாநாயகர் திட்டவட்டம்

எதிர்வரும் 14ம் திகதி பாராளுமன்றம் கூடும்போது  பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை வாக்கெடுப்பிற்கு எடுப்பது  என சபாநாயகர் கருஜெயசூரிய தீர்மானித்துள்ளார்

கட்சிதலைவர்களின் சந்திப்பில் ஐக்கியமக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்ட போதிலும் சபாநாயகர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

எதிர்வரும் 14 ம் திகதி பாராளுமன்றத்தில் சம்பிரதாய அமர்வொன்று மாத்திரமே இடம்பெறவேண்டும் பாராளுமன்ற பாரம்பரியத்தினை பின்பற்றி அதனை அன்றைய தினம் ஒத்திவைக்கவேண்டும் என ஐக்கியமக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

எனினும் அன்றைய தினம் பாராளுமன்றத்தில்  விவாதங்கள் எதனையும் மேற்கொள்ள முடியாது என்ற சட்டமெதுவும் இல்லை என ஐக்கியதேசிய கட்சியின் பிரதிநிதிகள் வாதிட்டுள்ளனர்.

இதேவேளை பாராளுமன்றத்தின் நிலையியல் கட்டளை சட்டத்தின் கீழ் சபாநாயகரே அதன் நிகழச்சி நிரலை தீர்மானிக்கவேண்டும் என ஏனைய கட்சிகள் தெரிவித்துள்ளன.

இதன் பின்னர் கருத்துதெரிவித்துள்ள சபாநாயகர் கருஜெயசூரிய   116 பாராளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானமொன்றை சமர்ப்பித்துள்ளனர் 14 ம் திகதி இதன் மீதான வாக்கெடுப்பு இடம்பெறும் என தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் பெரும்பான்மையை உறுதிசெய்வதற்கான வாக்கெடுப்பை நடத்துவதற்காக தேவைப்பட்டால் நிலையியல் கட்டளைசட்டங்களை இடைநிறுத்த தயார் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது காணப்படும் சூழ்நிலை இலங்கையின் பொருளாதாரத்திற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் இதற்கு கூடிய விரைவில் தீர்வை காணவேண்டும் என்பதே  அனேக இலங்கையர்களின் விருப்பம் என கருஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை நிகழ்ச்சிநிரல் குறித்து சர்ச்சை எழுந்தால் இந்த விடயத்தை எடுத்துக்கொள்வதா  இல்லையா என்பது குறித்த வாக்கெடுப்பை நடத்தவேண்டும் என ஜேவிபி தெரிவித்துள்ளது.

3 comments:

  1. If MR loses that may be the end of his political career having walked into the political coffin the MS intentionally or otherwise made for him.

    ReplyDelete
  2. எல்லோரும் சேர்ந்து மக்களின் தலையில் மண்போட துணிந்து விட்டார்கள். வாழ்க ஜனநாயகம்.

    ReplyDelete
  3. இலங்கையில் வெளியார் தலையீட்டை தவிர்பதானால் கடைசி நிமிட சமரசங்கள் அவசியமாகின்றது. நம்ப முடியாத சம்பவங்கள் சமரசங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.