Header Ads



'எனக்கு 113 ஆதரவு இல்லையென்றால், என்னை கெட்டவன் என்று கூறவேண்டாம்' - மைத்திரிக்கு மஹிந்த அச்சுறுத்தல்

-tw-

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் வேறு கட்சிகளில் இருந்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்திற்கு அழைக்கப்பட்டிருந்ததுடன் 86 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றிருந்ததாக அரசியல் தரப்பு செய்திகள் தெரிவித்துள்ளன.

இதனை அறிந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதியும் பிரதமருமான மகிந்த ராஜபக்ச பேய் ஆவேசம் கொண்டதாகவும் மைத்திரி மற்றும் தமக்கிடையிலான இணைப்புக்கு பங்களிப்பு வழங்கிய எஸ்.பி. திஸாநாயக்க, டிலான் பெரேரா உட்பட அனைவரையும் ஆபாச வார்த்தைகளால் திட்டி தீர்த்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பக்கம் திரும்பிய மகிந்த ராஜபக்ச நாளைக்குள் “எனக்கு 113 உறுப்பினர்களின் ஆதரவு திரட்டப்படவில்லை என்றால் என்னை கெட்டவன் என்று கூறவேண்டாம்” எனக் கூறிவிட்டு ஜனாதிபதி செயலகத்தில் இருந்து வெளியேறியதாகவும் அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்துக்கொள்ளாத நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலரது தொலைபேசிகளும் சுவிச் ஓப் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மகிந்த ராஜபக்சவின் அச்சுறுத்தலால் ஜனாதிபதி உட்பட அவரது அணியினர், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை திரட்ட விசேட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

11 comments:

  1. மதி்மேல் பூனையாகிய மைதிரி ஐயாவுக்கு தற்போதேய மஹிந்த ராஜா ஆப்படித்து எச்சரிக்க தொடங்கிவிட்டார்!

    ReplyDelete
  2. மக்களே நன்றாக கவனியுங்கள் மஹிந்தவும் அவனுடைய குடும்பத்தாறும் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று சுமார் 63 லட்ச மக்களின் அபிப்பிராயம், அதேபோன்று அதிகமான பாராலுமன்ற உருப்பினர்களின் ஆசையும் அவர்கள் அடக்குமுறைக்குல் உள்வாங்கப் படகூடாது என்பதாகும்,பாராலுமன்றத்தை கலைத்துவிட்டு பழைய முறையில் தேர்தல் நடத்தினாலும் மஹிந்தவின் கட்சியால் வெற்றிபெற முடியாது என்பது உறுதி!

    ReplyDelete
  3. இவர்கள் கற்பனை செய்வது போன்று 113 ஆசனங்கள் இவர்களுக்கு உருதியாகி இருந்தால் எப்போதே பாராலுமன்றத்தை பலவந்தமாக கூட்டி இருப்பார்கள்!

    ReplyDelete
  4. நாட்டையும் மக்களையும் குட்டிச்சுவராக்கிய - நன்றிகெட்ட மைத்திரி கேவலப்பட வேன்டாமா ???

    ReplyDelete
  5. பெரும்பான்மை கிடைக்க முன்பேயே இந்த ஆட்டம் என்றால், கிடைத்த பின் மைத்ரி அதோ கதிதான்.

    ReplyDelete
  6. This is what we expected to be happen to M3

    ReplyDelete
  7. ஆறு அடி மண் is waiting... for M3

    ReplyDelete
  8. riyal அப்துல்லாஹ், தேர்தல் நடத்தால் மஹிந்த வெல்லுவது உறுதி, நாம் ஒன்றும் செய்ய முடியாது. (உள்ளூராட்சித் தேர்தல் கற்றுத் தந்த பாடம்.)

    ReplyDelete

Powered by Blogger.