Header Ads



பாராளுமன்ற உறுப்பினர்கள் 109 பேரின், அரசியல் வாழ்க்கைக்கு விரைவில் முடிவு கட்டப்படும்

ஐக்கிய தேசியக் கட்சியின் 109 நாடாளுமன்ற உறுப்பினர்களின் அரசியல் வாழ்க்கைக்கு விரைவில் முடிவு கட்டப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்கணாலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனினால் மேற்கொள்ளப்பட்ட பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய, அவரிடமிருந்து கோடிக் கணக்கில் பணம் பெற்றுக்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் 109 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டதன் பின்னர் அவர்களது அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படும்.

இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ள நேரிடும்.

எதிர்வரும் சில தினங்களில் அர்ஜூன் மகேந்திரன் கைது செய்யப்படுவார்.

அர்ஜூன் மகேந்திரனை கைது செய்ததன் பின்னர் அவரிடமிருந்து மோசடியுடன் தொடர்புடைய ரகசியங்கள் அம்பலமாகும் எனவும் அதன் காரணமாகவே நல்லாட்சி அரசாங்கம் அர்ஜூன் மகேந்திரனை கைது செய்யவில்லை என கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. பெரும்கள்ளர்களாகிய நீங்களும் பெரும்கள்ளர்களாக முயற்சிக்கும் ரனில்கோஸ்டியும் மக்களின் பணத்தை எவ்வாறெல்லாம் ஆட்டையை போட்டு எந்த நாட்டில் பதுக்கி வைத்துள்ளீர்கள் அதை மக்களுக்கு வெளிப்படுத்தி அப்பணங்களை நாட்டின் உள்ளே கொண்டுவாருங்கள் அவ்வாறு செய்தால் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை ஒரு வகையில் கட்டுப்படுத்த உதவும்

    ReplyDelete
  2. மனைவியும் பிள்ளைகளும் என்னை வீட்டில் யிம்மதியாக தூங்க விடமாட்டிக்கின்றார்கள் எப்படியாவது ஒரு அமைச்சு போஸ்ட்டுடன்தான் வீட்டுனுல் வரவேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார்கள்' ஆகவே எதையாவது ஒரு அமைச்சு பொறுப்பை தாருங்கள் என்று அந்த அரசாங்கத்தில் யாசகம் கேட்டு அலைந்த ஆசாமிதான நீ!

    ReplyDelete
  3. மக்களுக்கு 220 பேருமே அவசியமில்லை. புதிய உறுப்பினர்கள் தான் தற்போதைய தேவை.

    ReplyDelete
  4. ​பொய்யில் பிறந்து, பொய்யில் வாழ்ந்து, பொய்யிலேயே இலங்கை மக்களை ஏமாற்றிப்பிழைத்து இப்போது அதே பொய்யில் மக்களை ஏமாற்றிக் கொண்டே இருப்பது மட்டுமல்ல அந்தவழியில் மக்களையும் சிந்திக்கத்தூண்டுகிறான். அல்லாஹ் இந்தப் பொய்யர்கள் கூட்டத்தின் ஆபத்திலிருந்து மக்களைக்காப்பாற்றுமாறு பிரார்த்தனை செய்வோம்.

    ReplyDelete

Powered by Blogger.