Header Ads



நவீன பாசிஸவாதியான மொஹமட் பின் சல்மான் MBS, துருக்கிக்கு அனுப்பிய கொலை டீம்

-Abu Maslama-

ஒரு டீம் அத்தாதுர்க் விமான நிலலையத்தில் வந்திறங்கியதை துருக்கிய சீ.சீ.டீவி கமெராக்கள் துல்லியாமாக காண்பிக்கின்றன. இது நடந்தது ஒக்டோபர் மாதம் இரண்டாம் திகதி. அவர்கள் இரகசியமாக வரவில்லை. பகிரங்கமாகவே வந்திறங்கினர்.

கஸ்டம்ஸ் அறிக்கையின்படி அதில் வந்தவர்களில் ஒருவர் எலும்பு அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் கருவியை அவர் கைவசம் வைத்திருந்தார். அதே ஒக்டோபர் இரண்டாம் திகதி சவுதி அரேபியாவின் பிரபல பத்திரிகையாளர் ஜமால் கஷோகி காணாமல் போயிருந்தார்.

அமெரிக்காவில் வதிவிடம் பெற்றிருந்த ஜமால் கஷோகி தனது துருக்கிய காதலியுடன் இல் வாழ்க்கையில் நுழைவது தொடர்பான சில ஆவணங்களை சீர்செய்வதற்கு இஸ்தான்புல்லில் இருந்த சவுதி எம்பஸிக்கு சென்ற பின் திரும்பவே இல்லை.

துருக்கி உளவுத்துறை விமான நிலையத்தில் வந்திறங்கிய பெனிட்ரேஷன் டீம் ஜமால் கஷோகியை விசாரணை செய்து பின் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்துள்ளது என சந்தேகிக்கிறது. வந்தவர்கள் அமைதியாக திரும்பி சென்றும் விட்டார்கள்.

கஷோகி காணாமல் போனதற்கு முன்னதாக, வொஷிங்டன் போஸ்ட், அந்த பத்திரிகையாளரைக் கடத்திச் செல்வதற்கான ஒரு திட்டத்தை வெளிப்படுத்தும் சவூதி அதிகாரிகளுக்கு இடையிலான தகவல் பரிமாற்றங்களை அமெரிக்க உளவுத்துறை குறுக்கீடு செய்திருந்ததாக அறிவித்திருந்த நிலையில், அவரை அகற்றுவதற்கான சவூதி திட்டங்கள் குறித்து அமெரிக்க அரசுக்குத் தெளிவாக தகவல் அளிக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது.

கஷோகி காணாமல் போவதற்கு முன்னர், ஒரு மதிப்பீட்டின்படி 30 சவூதி பத்திரிகையாளர்கள் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள் அல்லது காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள், இதற்கு மேற்கத்திய சக்திகளிடமிருந்து, அவற்றில் பிரதானமாக அந்த அரசாட்சிக்கு பில்லியன் கணக்கில் ஆயுதங்களை விற்கும் மற்றும் அதன் எண்ணெய் வளத்திலிருந்து இலாபம் உறிஞ்சும் அமெரிக்காவிடமிருந்து எந்த எதிர்ப்பும் இருக்கவில்லை.

இலக்கு வைத்து படுகொலை செய்யும் முறையை ஸ்ராலின் அறிமுகம் செய்தார். ஹிட்லர் ஐரோப்பா முழுதும் செய்து முடித்தார். இஸ்ரேல் அதனை அபிவிருத்தி செய்து ஒரு டிபார்ட்மென்டாகவே பேணியது.

இப்போது அதனை மன்னர் சல்மானின் மகன் இளவரசர் மொஹம்மத் பின் சல்மான் (MBS) ஆரம்பித்துள்ளார். இவர் மேற்கத்திய ஊடகங்களால் சிறந்த "சீர்திருத்தவாதியாக" பாராட்டப்பட்டவர் என்பதுடன், ட்ரம்ப் நிர்வாகத்தாலும் அமெரிக்க நிதியியல் உயரடுக்காலும் உபசரிக்கப்பட்டவர். அரச குடும்ப உறுப்பினர்கள், முக்கிய வணிக பிரமுகர்கள் மற்றும் சில பத்திரிகையாளர்கள் உள்ளடங்கலாக இவர்களுக்கு எதிராக ஒரு மூர்க்கமான அடுக்குமுறையைத் தொடங்கினார் MBS .

சவூதி அரேபியாவின் வக்கிரமான முடியாட்சி நீண்டகாலமாக மத்திய கிழக்கு எங்கிலும் ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கும் மற்றும் அரசியல் பிற்போக்குத்தனத்திற்கும் அச்சாணியாக இருந்து வந்துள்ளது. அந்த ஆட்சி வழமையாக அரசியல் எதிர்ப்பாளர்கள் மற்றும் அமைதியான வழியில் போராடியவர்களின் தலைகளைத் துண்டித்துள்ள நிலையிலும் (2017 இல் மட்டும் வாளுக்குப் பலியானவர்கள் 150 பேர்).

அமெரிக்காவிற்கு இதில் இருக்கும் ஒரே இழப்பு சவுதி அரேபிய அரச குடும்ப விகாரங்கில் தங்களிற்காக இயங்கிய ஏஜென்டை இழந்ததே. மற்றப்படி அவர்கள் இதில் கோபம் கொள்ள எதுவுமில்லை. ஏனென்றால் “நிழலுலக" சித்திரவதையாளர் ஒருவர் சிஐஏ இன் இயக்குனராக மேலுயர்த்தப்பட்டுள்ளார் ட்ரம்ப் நிர்வாகத்தில்.

ஜமால் கஷாகி சவுதி அரேபியாவின் உயர்மட்டத்துடன் தொடர்புகளை பேணியவர். அரண்மனை விருந்துகளில் இவரை மிஸ்பண்ணவே முடியாது. நீண்டகால சவூதி உளவுத்துறை தலைவரும் அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான இளவரசர் துர்கி பின் ஃபைசல் இன் ஓர் உதவியாளராக சேவையாற்றிய அவர், அந்த முடியாட்சிக்கும் மேற்கு ஊடகங்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் இடையிலான மத்தியஸ்தராக அறியப்பட்டிருந்தார்.

அமெரிக்க சார்பில் சல்மானை அழுத்தம் கொடுக்கும் ஒருவராக இவர் செயற்பட ஆரம்பித்தார். அதற்காக வொஷிங்டன் போஸ்டின் முதன்மை நிருபர்களில் ஒருவராக அடையாளப்படுத்தப்பட்டார்.
மொஹம்மத் பின் சல்மான் (MBS)-இனது பேர்சனல் பற்றியும், அவரது கொள்கைகள் பற்றிய விமர்சனங்களும் தான் இந்த கொலைகளிற்கு காரணமாயின. அரச குடும்ப பிளவுகள் பற்றிய இவரது ஆய்வுகள் MBS-ஐ ஆத்திரப்படுத்தின. யெமன் மீதான சவுதியின் வலிந்த யுத்தத்தை கடுமையாக விமர்சனம் செய்தார். விடுவாரா MBS. அசாசினேசன் டீமை துருக்கிக்கு உள்ளேயே அனுப்பி விட்டார்.

ஒரு பாசிஸ ஜெனரல் தன்னைப் பற்றிய உண்மைகளையும், விமர்சனங்களையும் எப்படி எதிர்கொள்வானோ! அதே பாணியில் இயங்கியுள்ளார் MBS. அப்படியெனில் வருங்காலங்கில் சவுதி என்பது பாசிஸ பாலைவனமாக மாறலாம் எனும் ஐயங்கள் எழுகின்றன.

அவர் உடல் பாகங்கள் கிடைக்கவில்லை. அவர் கொல்லப்பட்டாரா அல்லது கிட்நேப் செய்யப்பட்டு சவுதிக்கு கொண்டு செல்ப்பட்டாரா என்பது பற்றி துல்லியமான தகவலை துருக்கி ஊடகங்கள் வெளியிடவில்லை.

இப்போது துருக்கி அரசாங்கம் தங்கள் நிருபரின் கொலைக்கு பதில் சொல்ல வேண்டும் என்றும், தாங்கள் துருக்கியுடன் கூட்டாக இணைந்து இந்த கொலை பற்றிய புலனாய்வுகளை மேற்கொள்ள தயார் என்றும் இஸ்ரேல் ஸ்டைலில் அறிக்கை விடுகிறது சவுதி.

இது இதுவரை கிடைத்த தகவல்களின் பதிவு. மர்மங்கள் துலங்களாம்.

5 comments:

  1. If you are a supproter of IHWANEE and hate Saudi.. read following link

    http://www.jaffnamuslim.com/2018/10/blog-post_528.html

    Brother remember... Do not exit Muslim world by spreading lies.

    Remember to obey the Statement of Allah below.

    It is well known that verifying news is required according to sharee’ah, because Allaah says (interpretation of the meaning):

    “O you who believe! If a Faasiq (liar — evil person) comes to you with any news, verify it, lest you should harm people in ignorance, and afterwards you become regretful for what you have done”

    [al-Hujuraat 49:6]

    Stop spreading lies.

    ReplyDelete
  2. What happened to Turkey's intelligence ? They were telling something (lie) but what happened is different.

    Even President of the TURKEY said.. this man was killed inside the embassy boldly.. BUT his statement seems to be .....?

    ReplyDelete
  3. @Muhammed, “what happened “Turkey’s intelligence”
    Good joke

    ReplyDelete
  4. Haha, u all look so funny guys. There are 1000 of people dieing in Palestine, Yeman all over the world. But when US portrait the news on killing a single person thru CNN, BBC, and Google on a daily basis as trending news, even he is a saudi guys, U all are in front seat to criticize it. Lets stop u guys make this as trending news.

    ReplyDelete
  5. I can't understand why people easily deny the wrong doings of these Royal family Arab's? Is it become a sunnah to acknowledge everything they do. I seriously doubt MBS, the son of the custodian of the two holy masjids has stains of blood in his hand. If it is true it is a shame to all Muslims around the world. They have already killed thousands in Yemen and their only protector is America!

    ReplyDelete

Powered by Blogger.