Header Ads



மாற்றுத்திறனாளியான மாணவனின், மகத்தான சாதனை


2018ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகி, வெற்றி பெற்ற மாணவர்களின் விபரங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், மலையகத்தில் இருக்கும் ஒரு தமிழ் மாணவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

லிந்துலை தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் செல்வகுமார் நிரஞ்சன் என்ற மாற்றுத்திறனாளியான சிறுவன் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்று அங்குள்ள அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார்.

22 மாணவர்கள் குறித்த பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய போதும், அதில் இம்மாணவர் மட்டுமே சித்தி பெற்றுள்ளார். அத்துடன் 18 மாணவர்கள் 70க்கும் மேல் புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.

இதில் செல்வகுமார் நிரஞ்சன் என்ற சிறுவன் பிறப்பிலிருந்தே முதுகு எலும்பு பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் பெற்றோரின் உதவியுடனேயே பாடசாலைக்கு வருகின்றார்.

இவருடைய பெற்றோர் தோட்டத்தொழில் செய்து தமது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

இவர் 166 புள்ளிகளைப் பெற்று புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்றுள்ள விடயம் அனைவர் மத்தியிலும் பெரிதும் பேசப்படுகின்றதுடன், குறித்த மாணவனுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இதில் மற்றுமொரு விடயம் என்னவென்றால் இந்த மாணவனுக்கு 4 தம்பிமார்கள் இருக்கின்றார்கள். இதில் 3 பேர் ஒரே சூலில் பிறந்த 3 குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்க விடயம்.

இவருடைய நிலையை கருத்திற்கொண்டு உதவ விரும்புபவர்கள் கீழ்க்காணும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு உதவிகளை வழங்கலாம் என பிரதேசவாசிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொலைபேசி இலக்கம் - 071 8814824

மாணவனின் தந்தை செல்வகுமார்


3 comments:

  1. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. congratulation, may god bless you

    ReplyDelete
  3. ஊனம் உள்ளத்தில் தான் இருக்க கூடாது.

    ReplyDelete

Powered by Blogger.