Header Ads



தம்புள்ளை பள்ளிவாசலை அகற்ற இணக்கம் - ஆனால் காணி வழங்க, சிங்களவர்கள் எதிர்ப்பு


தம்­புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்­ளி­வா­சலை தற்­போ­துள்ள இடத்­தி­லி­ருந்தும் அகற்றி புதி­யதோர் இடத்தில் நிர்­மா­ணித்துக் கொள்­வ­தற்கு பாரிய நகர் மற்றும் மேல்­மா­காண அமைச்­சினால் ஒதுக்­கப்­பட்­டுள்ள காணி பள்­ளி­வா­ச­லுக்கு வழங்­கப்­ப­டாது தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளதால் காணியை பள்­ளி­வா­ச­லுக்குப் பெற்றுத் தரு­வ­தற்­கான ஏற்­பா­டு­களைச் செய்­யு­மாறு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

தம்­புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்­ளி­வா­சலின் நிர்­வாக சபை உறுப்­பி­ன­ர் எஸ்.வை.எம்.சலீம்தீன் ஜனா­தி­ப­தி­யிடம் இக்­கோ­ரிக்­கையை விடுத்­துள்ளார். அவர் ஜனா­தி­ப­திக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது;

பாரிய நகர திட்­ட­மிடல் மற்றும் மேல்­மா­காண அபிவிருத்தி அமைச்சு தம்­புள்ளை, ஹைரியா பள்­ளி­வா­ச­லுக்­கென காணி­யொன்­றினை ஒதுக்கி நீண்ட கால­மா­கியும் அது இது­வரை வழங்­கப்­ப­ட­வில்லை.

இது தொடர்­பான கலந்­து­ரை­யா­ட­லொன்று தம்­புள்ளை ரங்­கிரி ரஜ­வி­காரை அதி­பதி மற்றும் பள்­ளி­வாசல் நிர்­வாக சபை உறுப்­பி­னர்­க­ளுடன் அமைச்சர் சம்­பிக்க ரண­வக்­கவின் தலை­மையில் நடை­பெற்­றது.

குறிப்­பிட்ட காணி பள்­ளி­வா­ச­லுக்கு வழங்­கப்­ப­டக்­கூ­டாது என பெரும்­பான்மை இன சமூ­கத்­தினால் எதிர்ப்பு வெளி­யி­டப்­பட்­ட­தை­ய­டுத்து காணி இது­வரை வழங்­கப்­ப­ட­வில்லை. பள்­ளி­வாசல் நிர்­வாகம் பள்­ளி­வா­சலை அவ்­வி­டத்­தி­லி­ருந்தும் அகற்­றி­கொள்ள இணக்கம் தெரி­வித்­துள்ள நிலையில் பள்ளிவாசலுக்கு ஒதுக்கப்பட்ட காணி தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

எனவே, அந்தக்காணியை தாமதிக்காது பள்ளிவாசலுக்கு பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-Vidivelli

No comments

Powered by Blogger.