Header Ads



போத்தலில் அடைக்கப்பட்ட நீருக்கு, உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம் (விபரம் உள்ளே)


போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

செப்டெம்பர் 28 (கடந்த வெள்ளிக்கிழமை) முதல் அமுலாகும் வகையில், பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் விடுக்கப்பட்டுள்ள குறித்த அறிவிப்பு தொடர்பில் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அவ்விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம், உற்பத்தியாளர், இறக்குமதியாளர், பொதி செய்பவர், விநியோகஸ்தர், வியாபாரி உள்ளிட்ட எவரும்  உள்நாட்டில் பொதி செய்யப்பட்டு, போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான உச்சபட்ச சில்லறை விலைக்கு மேலாக விற்பனை செய்யவோ, விற்பனைக்கு விடவோ, விறபனைக்கு வெளிப்படுத்தவோ அல்லது விற்பனைக்காக காட்சிப்படுத்தவோ முடியாது என பாவனையாளர் அதிகார சபை கட்டளையிட்டுள்ளது.

போத்தலின் அளவு   உச்சபட்ச சில்லறை விலை

350-499 மி.லீற்றர் - ரூபா 26
500-749 மி.லீற்றர் - ரூபா 35
1-1.49 லீற்றர் - ரூபா 50
1.5-4.99 லீற்றர் - ரூபா 70
5-6.99 லீற்றர் - ரூபா 150
7 லீற்றர் - ரூபா 170

No comments

Powered by Blogger.