Header Ads



சவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை

செளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனையை வழங்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

"அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் நான் மிகுந்த கோபம் மற்றும் வருத்தத்துக்கு உள்ளாகலாம்," என்று கூறியுள்ள டிரம்ப், சௌதி உடனான பெரிய பாதுகாப்பு ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படாது என்று கூறியுள்ளார்.

"ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள் விரும்புவது போல பாதுகாப்பு ஒப்பந்தங்களை ரத்து செய்யாமல் தண்டிக்க வேறு வழிகள் உள்ளன. அவ்வாறு ரத்து செய்து வேலைவாய்ப்புகளை பாதிக்க நான் விரும்பவில்லை," என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதனிடையே செளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மாயமானது குறித்து "உண்மையை" தெரிவிக்குமாறு ஐ.நாவின் பொதுச் செயலர் வலியுறுத்தியுள்ளார்.

இம்மாதிரியான சம்பவங்கள் அடிக்கடி நேரும் என்று அச்சப்படுவதாகவும், மேலும் இது "வழக்கமான ஒன்றாக மாறிவிடும்" என்று அஞ்சுவதாகவும் ஐ.நா பொதுச் செயலர் அண்டான்யு குண்டாரிஷ் பிபிசியிடம் தெரிவித்தார்.

3 comments:

  1. KSA slave for US power but US slave for KSA's money!

    ReplyDelete
  2. Hai Ateeq abu...

    See the latest information... The claim by Turkey and this article is wrong.. the man is living but not killed...

    OBEY THE statement of Allah

    “O you who believe! If a Faasiq (liar — evil person) comes to you with any news, verify it, lest you should harm people in ignorance, and afterwards you become regretful for what you have done”

    [al-Hujuraat 49:6]

    ReplyDelete

Powered by Blogger.