October 22, 2018

ஜமால் கொலைக்கு மோசமான கூலிப்படையே காரணம், இளவரசருக்கு தொடர்பு இல்லை - சவூதி

சர்வதேச அளவில் கடுமையான கண்டனங்களை பெற்ற மாயமான பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொலைக்கு பின்னணியில் மோசமான கூலிப்படை உள்ளதாக செளதி அரேபியா தெரிவித்துள்ளது.

இது குறித்து ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்திடம் பேசிய செளதி வெளியுறவுதுறை அமைச்சர் அடேல் அல்-ஜுபேர், ஜமால் கசோஜயை கொன்ற செயல் மிக பெரிய தவறு என்று குறிப்பிட்டார். செளதி இளவரசர் இந்த கொலைக்கு உத்தரவிட்டதாக கூறப்படுவதை அவர் மறுத்தார்.

கசோஜிக்கு என்ன ஆனது என்பதை விளக்க கடுமையான சர்வதேச அழுத்தங்களை சந்தித்த செளதி அரேபியா, ஆரம்பத்தில் கசோஜி உயிரோடு இருப்பதாக கூறிவந்தது.

செளதியின் முடியாட்சியை தொடர்ந்து விமர்சித்து வந்த ஜமால் கசோஜி, அக்டோபர் 2ஆம் தேதி துருக்கியில் உள்ள செளதி தூதரகத்திற்கு சென்றார். அதன்பின் அவரைக் காணவில்லை.

கசோஜியின் மரணத்தை கொலை என்று செளதி வெளியுறவுதுறை அமைச்சர் அடேல் அல்-ஜுபேர் குறிப்பிட்டார்.

''இது தொடர்பான உண்மைகளை கண்டறிய நாங்கள் உறுதியாக உள்ளோம். அதேபோல், இந்த கொலைக்கு காரணமானவர்களை தண்டிப்பதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்'' என்று அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், ''தங்களின் அதிகார வரம்புக்கு வெளியே இந்த கொலையை சிலர் நடத்தியுள்ளனர். இது நிச்சயம் ஒரு மிகப்பெரிய தவறு ஆகும். இந்த தவறை மூடிமறைக்க அவர்கள் செய்த முயற்சிகள் மேலும் இதனை சிக்கலாகவும், பெரிதாகவும் ஆக்கியுள்ளது''

''எங்கள் நாட்டின் உளவு அமைப்பின் மூத்த உறுப்பினர்களுக்குக்கூட இது குறித்து தெரியாது'' என்று அவர் மேலும் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக புலனாய்வுத் துறையின் துணைத் தலைவர் அஹ்மத் அல்-அஸ்ஸிரி மற்றும் முடிக்குரிய இளவரசர் முகமத் பின் சல்மானின் மூத்த ஆலோசகர் சௌத் அல்-கத்தானி ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். BBC

7 கருத்துரைகள்:

Truth will come out ..

Sri Lanka wahabi; salafi groups do not have a say on this..
May be their religion allow them to kill as long as there is no Bida there

அப்படியே சம்பந்தப்பட்டவர்களின் கமுத்துகளியும் வெட்டினால் சரி

Alhamdulillah Most of the Jamath's in SriLanka are better than Shiya's /Thariqas / Quffar....

This mental ill Atteeq Abu Shiya/disbeliever was enemy of Islam. Its not Islam Allowed to kill. Look at the way how he was writing always. Crazy Man. We have many things to do in our country other then insulting SA.

Its your group Shiya allowed to kill Muslims. Muslims are peace lovers not like you. They will not respect Kuffar and disrespect the people of Islam.

He is insulting the foundation of Islam in all his commence.
He is smart in a beautiful tactic this ill Man Disrespecting Allah & Rasoolullah.
This guy is a dangerous man.
The TRUTH is. No One is perfect and no one in this world is ruling 100% according to Islam. But Alhamdulillah they are Muslims.

கூலிப்படைக்கு அவரை கொல்ல வேண்டிய தேவை என்ன. embassy உள்ளுக்கு வைத்து கொல்வதற்கு அனுமத் கொடுத்தது யார்.இன்ன நாள் இத்தனையாம் திகதி அங்கு வருவார் என்பது அவர்களுக்கு எப்படி தெரியும்.

Tell MbS that killing one person is like killing a whole nation! Who can do such a murder without MbS's knowledge? Now trying hard to show a drama in front of the international community. For sure, MbS has betrayed Islam and Muslims by this ugly act.

No work...So they keep biting the same issue again and again...

Do not worry.. Allah will judge this incident and punish correctly on the day of judgement.

Stay Cool now.. come on guys... now start talking others issues happening around the world. First spend time to study ISLAM and how to act accordingly before wasting time on ONE country leader.

On the day of kiyam.. Allah will not ask you about this rulers.. But you will be question about yourself. Let the kings and prince will answer themself.

There is a methodology to hand the issue of a Muslim Ruler, Learn from Scholars.

Never try to hand over or expose your Muslim Ruler to Kuffar governments, who are keep collecting information to jump at you and your countries.

This reporter... kept passing hate speech against to his land and Mulim Ruler to whom? to the kuffar who keep collecting information to attack our countries in future.

Do worry your daily life issues. Ask Allah to guide you and this Muslim rulers. OK.

Stay cool guys.

Yah brothers did you all pray fajrs (subah) salah with jamaath today ?

Post a Comment