Header Ads



போலி உம்ரா, முகவர்களிடம் ஏமாறாதீர்கள்...!

குறைந்த கட்­ட­ணங்­களில் உம்ரா பயண ஏற்­பா­டு­களை மேற்­கொள்­வ­தாக உறு­தி­ய­ளித்து ஏமாற்றும் உம்ரா முக­வர்கள் தொடர்­பிலும் ஏற்­க­னவே முற்­பணம் பெற்­றுக்­கொள்ளும் உம்ரா முக­வர்கள் தொடர்­பிலும் எச்­ச­ரிக்­கை­யாக இருக்­கு­மாறு அரச ஹஜ் குழு மக்­களை வேண்­டி­யுள்­ளது. முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­ப­டாத உம்ரா முக­வர்­க­ளுடன் பயண ஏற்­பா­டு­களை முன்­னெ­டுக்க வேண்­டா­மெ­னவும் வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.

உம்ரா முக­வர்கள் தொடர்பில் அரச ஹஜ் குழு­விற்குப் பல முறைப்­பா­டுகள் கிடைத்­துள்­ள­தா­கவும், குறைந்த கட்­ட­ணங்­களில் உம்ரா பய­ணி­களை அழைத்­துச்­செல்லும் முக­வர்கள் வர்த்­தக நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வ­தா­கவும் அரச ஹஜ் குழுவின் தலைவர் எம்.ரி.சியாத் தெரி­வித்தார்.

குறைந்த கட்­ட­ணங்­களில் பய­ணி­களை அழைத்­துச்­செல்லும் உம்ரா முக­வர்கள் சவூதி அரே­பி­யாவில் அவர்­களை பல்­வேறு அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு உட்­ப­டுத்­து­கி­றார்கள்.

உம்ரா பய­ணத்­துக்­காக முற்­பணம் பெற்­றுக்­கொள்ளும் முகவர் சில மாதங்­களின் பின்பு உறு­தி­ய­ளித்த கட்­ட­ணத்தை விட கூடு­த­லான கட்­டணம் செலுத்­து­மாறு வற்­பு­றுத்­தப்­ப­டு­வ­தாக முறைப்­பா­டுகள் கிடைத்­துள்­ள­தா­கவும் அவர் கூறினார்.

மேலும் அவர் தெரி­விக்­கையில் திணைக்­க­ளத்தில் பதிவு செய்­துள்ள உம்ரா முக­வர்­க­ளுக்கு எதி­ராக முறைப்­பா­டுகள் கிடைத்­தாலே அது தொடர்பில் சட்ட நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள முடியும். விசாரணைகளை நடாத்த முடியும். திணைக்களத்தில் பதிவு செய்யாத உம்ரா ஏற்பாட்டாளர்கள் தொடர்பில் திணைக்களத்தினால் எவ்வித உறுதிகளையும் வழங்க முடியாது என்றார்.

-Vidivelli

No comments

Powered by Blogger.