Header Ads



துமிந்த சில்வா, நாளை விடுதலை செய்யப்படுவாரா..?

இலங்கையில் வரலாற்றில் நாளைய தினம் மிக முக்கியமான வழக்கு தீர்ப்பொன்று வழங்கப்பட உள்ளதாக தனக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தனது இல்லத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இந்த ஊடக சந்திப்பின் போது இரண்டு பேருக்கு தொலைபேசி அழைப்பை எடுத்து தகவலை உறுதிப்படுத்திக்கொண்ட பிரதியமைச்சர், நாளைய தினம் வழக்கப்படும் தீர்ப்பொன்றில் குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர், அந்த வழக்கில் இருந்து முற்றாக விடுதலை செய்யப்படுவார் என்பதை 99 வீதம் நம்புவதாக கூறியுள்ளார்.

இதனிடையே பாரத லகஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்டோர் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுமீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம் நாளைய தினம் வழங்க உள்ளது.

எவ்வாறாயினும் பிரதியமைச்சர் வெளியிட்ட தகவல் இந்த வழக்கு பற்றியதா என்பதை அவர் கூறவில்லை.

No comments

Powered by Blogger.