Header Ads



உலகில் முதன்முறையாக, அதிரடிப்படைக்கு தலைவராகிய முஸ்லிம் பெண்

இந்திய ராணுவத்தின் Force 18 படைப்பிரிவின் பெண் லெப்டினண்ட் சோபியா குரைஷி ஒரு 38 வயது குஜராத்தி முஸ்லிம் பெண் ஆவார். இவரது அப்பா இந்திய ராணுவத்தில் மதபோதக பிரிவில் பணியாற்றியவர். சோபியாவின் கணவரும் ஒரு ராணுவ வீரர் தான். அவர் நவீன ரக ஆயுத பரிபாலன படையின் மேஜரான தாஜுத்தீன் குரைஷி ஆகும். இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகன் உண்டு.

சோபியா குரைஷி முதலில் 1999ல் ஆபிசர்ஸ் ட்ரைனிங் அகாடமியில் பயின்று ராணுவ சேவைக்கு வந்தார். இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள ராணுவ தள ரெஜிமன்டுகளில் பணியாற்றிய அனுபவசாலி ஆவார். பிறகு லெப்டினன்ட் கலோனலாக பதவி உயர்வு பெற்று Peacekeeping operations பிரிவில் பணியாற்றிய நிலையில் 2010ல் காங்கோ ராணுவ பயிற்சி முகாமிற்கு பயிற்சியாளராக அனுப்பி வைக்கப்பட்டார். பல நாட்டு பெண் ராணுவ வீராங்கணைகளுடன் பணியாற்றிய இவரது சேவையை பாராட்டிய இந்திய இராணுவம் 2016ம் ஆண்டு அவரை Force 18 எனும் அதிரடிப்படை பிரிவிற்கு தலைவராக்கியுள்ளது. உலக சரித்திரத்தில் முதன்முறையாகவும் இந்திய சரித்திரத்தில் முதன்முறையாகவும் ஒரு பெண், இராணுவ படைப்பிரிவிற்கு லெப்டினன்ட் கலோனலாக பதவியேற்றிருப்பது இதுவே முதல் முறையாகும்.

Force 18 என்பது உலகிலேயே மிகப்பெரிய இராணுவத்தின் , அதிரடிப்படை பிரிவாக கருதப்படுகிறது. அது ASEAN ( Association of South East Asian Nations ) எனப்படும் கூட்டு நாடுகளின் வீரர்களை உடைய ஒரு படைப்பிரிவு , இதில் ஜப்பான், சீனா,ரஷ்யா,அமெரிக்க,தென்கொரிய,நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அடங்கிய 18 நாடுகளின் படைகளை சார்ந்த வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.இந்த Force 18 படைப்பிரிவில் சோபியா குரைஷி மாத்திரமே ஒரே பெண் என்பது குறிப்பிடத்தக்கது. பல நாட்டு வீரர்களின் சாகசத்தை கண்டு வியக்கும் தாம் , தனது பணியில் பெருமிதம் கொள்வதாக கூறும் சோபியா குரைஷி அனைத்து இந்திய பெண்களையும் ராணுவத்தில் பணியாற்ற அழைக்கிறார். சாதாரண கமாண்டராக இருந்து லெப்டினன்ட் கலோனல் பதவிக்கும் , ஒரு பெண்ணாக மிகப்பெரிய கூட்டு அதிரடிப்படைக்கு தலைவராக உயர்ந்திருக்கும் சோபியா குரைஷியின் நெஞ்சுரம் மிகவும் பாராட்டத்தக்கது.

Rosy

2 comments:

  1. Yes!. People like Osama bin Laden and Abū Bakr Baghdadi are big matter for Muslims

    ReplyDelete

Powered by Blogger.