Header Ads



ஒரு ஊரே அழுகிறது, அரசாங்கம் வேடிக்கை பார்க்கிறது..!!


எம் தேசத்தை சுருட்டி போட்ட சுனாமி பேரலைகூட எட்டு நிமிடம் மட்டுமே எமது உயிர்களையும் உடமைகளையும் அழித்துவிட்டுச் சென்றது. ஆனால் இந்த மண்ணரிப்பு மொத்தமாக ஒரு ஊரையே கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக்கொண்டிருக்கின்றது. ஒரு பிரதேசத்தின் மொத்த நிலமே பரிபோகும் அபாயத்தில் அந்த ஊர் ஏழு நாட்களாக வீதியில் இருந்து கூவி அழுவது யார் காதிலும் விழவில்லையா?

மாபெரும் தலைவர் என்று போற்றும் மறைந்த அமைச்சர் அஷ்ரப் தென்கிழக்கில் தனது கனவுப் பிரதேசமாக எண்ணிய ஒரு ஊர் இது. தென்கிழக்கையே சுமந்து நிற்கும் ஒரு ஊர். இன்று தன் இருப்பிடத்தைத் தொலைத்துவிட்டு தனக்கு நியாயம் வேண்டி நடுவீதியில் நிற்பதை கண்டும் காணாமல் இருப்பது ஏன்?

எப்போதும் அரசாங்கங்கள் ஏழைகளைக் கண்டுகொள்வதில்லை. ஏழைகளின் தேவையையோ கோரிக்கைகளையோ பொருட்படுத்துவதில்லை. அது போல இன்று ஒலுவிலையும் பொருட்படுத்தாமல் இருக்கும் அரசுக்கு யாருமே அழுத்தம் கொடுக்காத காரணம் என்ன, அந்த மக்களின் அழுகையையும் கோரிக்கைகளையும் சுமந்து வரும் ஊடகங்களின் செய்திகள் எந்தத் தலைவரனிது காதிலும் எட்டவில்லையோ?

ஒலுவிலுக்கு மட்டுமன்றி நிந்தவூர், அட்டப்பள்ளம், காரைதீவு என்று இந்த மண்ணரிப்பு தொடர்ந்து செல்லப்போவதை அறிந்துமா இன்னும் அமைதி காக்கின்றனர்? ஏழைகளின் கண்ணீர் கூரிய வாளுக்கு ஒப்பாகும், இந்தக் கண்ணீர் ஓர்நாள் இதற்கு பொறுப்பானவர்களின் கழுத்தை சீவத்தான் போகிறது என்று அறிந்துமா அமைதியாக இருக்கிறார்கள்?

மண்ணரிப்பு, இது ஒரு ஊரையே இன்று காவு கொண்டிருக்கின்றது. ஒரு பிரதேசத்தையே அழித்துக்கொண்டிருக்கின்றது. ஒரு ஊர் மக்களையே அழ வைத்திருக்கின்றது. ஆனால் யாரும் கண்டுகொள்ளவில்லை. கண்டுகொள்ளவும் மாட்டார்கள். ஏனென்றால் இந்த மக்கள் ஏழைகள், இந்த மக்கள் அதிகாரமற்றவர்கள், இந்த மக்கள் போலியான தலைமைகளை நம்பி வாக்குகளை கொடுத்தவர்கள். 

ஒரு ஊரின் சாபமும் கண்ணீரும் இந்த அரசியல் தலைமைகளை அழித்தே தீரும்!

அஷ்ரப்.
அக்கரைப்பற்று.

1 comment:

  1. இந்த அவலத்துக்கு தீர்வு கிட்டும் என்று அரசங்கத்தையும் நமது அரசியல்தலைகளையும் நம்பி இருப்பது கடல் வற்றி கருவாடு சாப்பிட காத்திருக்கும் கொக்கின் கதை போலத்தான் முடியும்.

    மொத்த ஊரையும் கடல் சாப்பிட்டு ஏப்பமுட முன் ஒலுவில் சகோதரங்களே உங்களால் முடியுமான சிறிய தடுப்பு நடவடிக்கைகளை இப்பவே ஆரம்பியுங்கள்.

    உடனடியாக செய்யவேண்டியது

    1. மணல்மூடைகளைக் கொண்டு ஒரு தடுப்பு
    2. மண்மூடை தடுப்புக்கு பின்புறம் (ஊர் பக்கம்) மணல் நிரப்புதல்
    3. கடலோர தாவரங்களை (அடம்பன் கொடி) நிரப்பிய மணல் பகுதியில் நாட்டுதல்.

    ReplyDelete

Powered by Blogger.