Header Ads



இலங்கையுடனான நல்லுறவை, வலுப்படுத்த ரஸ்யா விரும்புகின்றது - விளாடிமிர் புட்டின்

இலங்கையுடனான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதற்கு ரஸ்யா விரும்புகின்றது என ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

ரஸ்யாவிற்கான இலங்கையின் புதிய தூதுவர் தயான் ஜெயதிலக ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்துள்ளார்.அவ்வேளையே புட்டின் இதனை தெரிவித்துள்ளார்.

ரஸ்யா இலங்கையுடன்  பாரம்பரியமாக நல்லுறவை பேணி வருகின்றது என தெரிவித்துள்ள புட்டின் இலங்கையுடன் நெருங்கிய பொருளாதார உறவுகள் குறித்து ரஸ்யா ஆர்வமாகவுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இராணுவஒத்துழைப்பு தொடர்பில் செப்டம்பரில் இரு நாடுகளும் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டதையும் புட்டின் நினைவுகூர்ந்துள்ளார்.

இதேவேளை ரஸ்யாவிற்கான புதிய தூதுவர்கள் மத்தியில் உரையாற்றியுள்ள புட்டின் ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பு நாடு என்ற அடிப்படையில் நாடுகளின் இறைமை மற்றும் சமத்துவம் ஆகியவற்றை ரஸ்யா மதிக்கின்றது என தெரிவித்துள்ளார்.

நாடொன்றின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற கொள்கையையும் ரஸ்யா பின்பற்றுகின்றது எனவும் புட்டின் தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.