Header Ads



மக்கள் எமக்கு வழங்கிய ஆணையை, ஒருபோதும் துஷ்பிரயோகம் செய்ய மாட்டோம்.

பேருவளை நகர சபை பிரதேசத்திற்குட்பட்ட பகுதியில் வாழும் மக்கள்  நகர சபை மூலமாக எதிர்பார்க்கப்படும் சகல சேவைகளையும் பெற்றுக் கொடுக்கும் வகையில் இதுவரை பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பேருவளை நகர சபை உப தலைவர் முனவ்வர் றபாய்தீன் தெரிவித்தார். 


பேருவளை   கங்கானங்கொடையிலுள்ள உப நகர பிதாவின் அலுவலகத்தில் அண்மையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், பொதுமக்கள் எதிர்பார்க்கப்படும் பணிகளை நகர சபை உறுப்பினர்கள், அதிகாரிகளின் பூரண ஒத்துழைப்பின் காரணமாக செவ்வனே நிறைவேற்ற முடிகின்றது. 

நாம் ஒற்றுமையாக கட்சி வேறுபாடின்றி நகர சபைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். 
அதேபோல் எமது நகர பிதாவும் மக்களுக்கு சிறந்த சேவைளை வழங்க வேண்டும் எனும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்களை செயற்படுத்த திட்டமிட்டுள்ளார்.அதற்காக வௌிநாட்டு நன்கொடையாளர்கள்  பரோபகாரிகள் எமது நகர சபை பகுதியில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க முன்வந்துள்ளனர்.இவர்களுடன் விரைவில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். 


நகர சபை பகுதியிலுள்ள பெரும்பாலான வீதிகள் இன்று காபட் முறையில் புனரமைக்கப்பட்டுள்ளன.இன்னும் சில வீதிகளை விரைவில் புனரமைக்கவுள்ளோம்.அதேபோல் அபிவிருத்தியில் எந்த பகுதியும் புறக்கணிக்கப்பட மாட்டாது.தனிப்பட்ட நோக்கங்களுக்காக மக்கள் எமக்கு வழங்கிய ஆணையை ஒருபோதும் துஷ்பிரயோகம் செய்ய மாட்டோம். 
நாம் முன்னெடுக்கின்ற அபிவிருத்தி திட்டங்களுக்கு முன்னாள் பேருவளை நகர பிதாக்களான மர்ஜான் பளீல், மில்பர் கபூர் ஆகியோர் 
ஒத்துழைப்பு வழங்கி வருவதை இச்சந்தர்ப்பத்தில் நன்றியுணர்வோடு நினைவு கூர்கிறேன்.தொடர்ந்தும் எமது நகர பிதாவுடன் இணைந்து பேருவளை நகரின் அபிவிருத்தியை முன்னெடுக்க அனைவரும் கைகோர்த்து செயற்படுவோம் எனவும் அவர் கேட்டுக்ெகாண்டார்.

No comments

Powered by Blogger.