October 17, 2018

இலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்

-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்-

குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இலங்கை முஸ்லிம் வரலாற்றில் மிக முக்கியமான ஒன்றாகும்.

இலங்கையை ஆட்சி செய்த ஒரேயொரு முஸ்லிம் அரசனான கலேபண்டார குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்தவர் மட்டுமல்லாது இப்னு பதூதா இலங்கைக்கு விஜயம் செய்த இப்பிரதேசத்திற்கும் வருகை தந்திருந்தார்.

இப்னு பதூதா கண்டி நோக்கி பயணம் செய்த போது இப்பாதையினூடாக பயணம் செய்ததாகவும், இப்பிரதேசத்தில் சில சியாரங்கள் காணப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இவ்வாறான முஸ்லிம் வரலாற்றுடன் தொடர்புடைய பிரதேசத்தில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் நடந்திருக்கும் செயல் மிக மன வருத்தத்தைத் தருகின்றது.

தொன்மையும் வரலாறும்
அகார எனும் முஸ்லிம் கிராமம் தம்பதெனியா இலங்கையின் தலைநகராக மாற்றம் பெற்ற காலத்தில் தோற்றம் பெற்ற ஒன்றாகும்.

அக்காலப் பகுதியில் நாராவில, தும்போதர, பாந்துறாவ, பூஜ்ஜம்பொல, பம்மன, எலபடகம போன்ற பிரதேசங்களில் குடியேறிய மக்கள் வெள்ளிக் கிழமை ஜும்ஆ தொழுகைக்காக அகர பள்ளிவாசலுக்கே வந்தனர்.

இரவிலும், அதிகாலையிலும் கால் நடையாக மக்கள் பயணம் செய்து ஜும்ஆவுக்கு வரும் அனைவருக்கும் அகார மக்கள் பகலுணவு வழங்கி மகிழ்ந்த வரலாறுகள் காணப்படுகின்றன.

இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ள இறைநேசர் நபிகளின் பரம்பரை வந்த தபஹ்தாபிஈன்களைத் தொடர்ந்து வந்தவர்கள் என கருதப்படுகின்ற்அதேவேளை, இவர்கள்
எமன் தேசத்திலுருந்து இஸ்லாத்தை போதிப்பதற்காக இலங்கை வந்த 11 பேர் அடங்கிய குழுவினரில் ஒருவரே இங்கு அடக்கட்டுள்ள செய்யது இஸ்மாயில் வலியுள்ளாவாகும்.

இங்கு வருகை தரும் பெரும்பான்மை சிங்கள சகோதரர்கள் இச்சியாரத்தை தம்பி தெய்யோ என அழைத்து இன ஒற்றுமையை வளர்த்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சியாரம் உடைப்பு
இப்பிரதேசத்தை இயக்கவாதிகள் எதுவித வரலாற்று அறிவுமில்லாமல் தமது கொள்கை வெறிக்காக பல நூற்றாண்டு காலம் தொன்மையான இச்சியாரத்தை உடைத்துள்ளமை கண்டிக்கத்தக்க விடயமாகும்.

வரலாறு என்பது ஒரு சமூகத்தின் இருப்பு தொடர்பானது. இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத்தை தேடி அது தொடர்பான வரலாறுகளைத் திரட்டும் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகம் சியாரங்களிலிருந்து ஆரம்பிப்பதாக நிறுவுகின்றனர் .

இவ்வாறான நிலையில் எம் சமூகம் கண்மூடித்தனமாக நடந்து கொள்வது அனைவராலும் கண்டிக்கபட வேண்டிய ஒன்றாகும்.

பாரதூரம்
இலங்கையின் அடுத்த ஒரு இனக்கலவரம் இடம் பெறுமானால் இது குருநாகல் மாவட்டத்தில் இடம்பெறலாம் என்ற அச்சம் சூழ்ந்துள்ள வேளையில் இப்பிரதேசத்தில் இயங்கும் சமூகப் பார்வையற்ற சமயவாத இயக்கவாதிகள் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டிருப்பது குறித்த பிரதேசத்தில் மட்டுமல்ல முழு முஸ்லிம்களுக்கும் எதிராக செய்யப்பட்ட வரலாற்றுத் துரோகமாகவே பர்க்க வேண்டியுள்ளது.

செய்ய வேண்டியவை
குறித்த சியாரமும் நாட்டிலுள்ள ஏனைய சியாரங்களும் பாதுகாக்கப்பட வேண்டிய கட்டாய நிலைக்கு முஸ்லிம் சமூகம் உள்ளாக்கப்பட்டுள்ளது.

எனவேதான் இவ்விடயத்தில் முஸ்லிம் சமூக அமைப்புக்களும், பள்ளிவாசல் நிருவாகங்களும் தத்தமது பிரதேசங்களில் காணப்படும் சியாரங்கள், தொன்மையான அடையாள சின்னங்கள் போன்றவற்றை தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டும்.

இன்றேல் ஏற்கனவே தமது இருப்புத் தொடர்பாக பல்வேறு பிரச்சினைகளை எதிர் கொண்டிருக்கும் முஸ்லிம்கள் பூர்வீகமற்ற சமூகமாக இலகுவாக ஒதுக்கப்பட்டுவிடுவர்.

கண்டனம்
குறித்த சியாரத்தும் அதன் அடையாளத்தையும் உடைத்தெறிந்தவர்கள் இந்தாட்டின் மரபுரிமைக்கும், பொதுக்கலாச்சாரத்திற்கும் குந்தகம் விளைவித்தவர்களாகவே கருத வேண்டும். மட்டுமல்லாது இவர்கள் எதிர்கால முஸ்லிம் இருப்புக்கான அச்சுறுத்தலை விடுக்கும் இயக்கமாகவே கருதப்பட வேண்டியுள்ளது.

இவ்வாறானவர்களின் வன்முறைக்குணமும், தீவிரப் போக்கும் சாதாரண முஸ்லிம்களின் இருப்பை கேள்விக்குறியாக்குவதோடு முழுச் சமூகத்தினதும் இருப்பையும் கேள்விக்குறியாக்கி விடுவதாக கருதப்படுகின்றது.

எனவே, இதுபோன்றவர்களின் காட்டுமிராண்டித்தனமான செயலை அனைவரும் கண்டிக்க வேண்டியது அனைவரினதும் கட்டாய கடமையாகும்.

இது தொடர்பான ஆக்கபூர்வமான பின்னூட்டல்கள் சமூகத்திற்கு பயனளிக்கும் என எதிர்பார்க்கிறேன்.

22 கருத்துரைகள்:

SIHARAM ANPATHU UDAIKKA PADAVENDIYATHU UDAITHAVARKALUKU ALLAH ARUL PURIVANAHA UNGALIYALAM NATTU PATTRU ULLAH PATTRU SAMATHUVAM ANRU SOLLI YAHUTHIHAL AMATHURANUHAL AMATHU ILAKKU KILAFA

சியாரங்களைப் பற்றிய சரியான புரிதலும், மிதவாத அணுகுமுறைகளும் இல்லாமையே இவ்வாறான நிகழ்வுகளுக்குக் காரணம். முஸ்லிம்களது உள்ளங்களிலும், வாழ்வியலிலும் இருக்கும் மூட நம்பிக்கைகளையும், மார்க்க விரோத செயற்பாடுகளையும் உடைக்காமல் வெறும் சியாரங்களை உடைப்பதால் எதைச் சாதிக்க நினைக்கிறார்கள் இந்த அதிதீவிரப் புத்திசாலிகள்? முதலில் இவர்களின் கைகளை உடைக்கனும் என்டு நான் சொல்லவில்லை ப்ளீஸ்...

அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் அல்ஹம்து லிில்லாஹ். ஏனைய ஸியாரங்களும் உடைக்கப்பட வேண்டும். தொன்மை,வரலாறு,பாரம்பரியம்,கலாச்சாரம் என்ற பெயரில் அன்றைய ஜாஹிலிய்ய அனாச்சாரங்கள்தான் நடைபெறுகிறது.அக்காலம் பூமிக்கு மேல் உருவத்தை வைத்து வணங்கினார்கள் தற்போது பூமிக்கு கீழ் வைத்து வணங்குகிறார்கள் இதுதான் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்.
சிங்களவர் இந்த ஸியாரத்தை *தம்பி தெய்யோ* என்று பெயர் வைத்தது மிகப் பொருத்தமானது.
முடியுமென்றால் எஞ்சிய ஸியாரங்களையும் உடைத்தெரியுங்கள் ஈருலகிலும் வெற்றி பெருவீர்கள்.

வெளிநாட்டக் காசுக்காக இஸ்லாம் பேசும் சில இயக்க்கள் சீ.ஐ.ஏ இன் தேவைகளை நிறைவேற்றவே வரலாற்றுக் சான்றுகளை அழிக்கின்றது.இன்றைய இலங்கை முஸ்லீம்களின் நிலையை சிந்தித்து செயற்படாது தமது எஜமானர்களின் அன்பைப்பெற முயற்சிக்கின்றது.வெளிநாட்டக் காசில் தமது வயிற்றை வளப்பதற்காக திரும்புகின்ற பக்கமெல்லாம் தேவைக்கு மேலதிகமாக பள்ளிகளையும் தக்கியாக்களையும் கட்டி பெரும்பானமை சமூகத்தை பொங்கியெழச் செய்து பல்வேறு பிரச்சினைகளைத் தோற்றுவித்ததும் இல்லாமல் முஸ்லீம்களின் இருப்பபை அழிப்பதற்கும் இந்த சமூக துரோகிகள் உதவி செய்கின்றனர்( மன்னிக்கவும் தேவைக்கு பள்ளிகட்டுவதை நான் இங்கு குறிப்பிவில்லை சில பாடசாலைகளில் கட்டப்பட்ட பள்ளிகளில் எந்தப் பயனும் இல்லாமல் storeஆகப் பயன்படுத்துகிறார்கள் மட்டுமல்ல சில பள்ளிகளில் ஐவேளை தொழ நால்வரும் இல்லை அவற்றைத் தான் குறிப்பிட்டேன்)

முஹம்மது யூசுஃப் உடைய கருத்து முற்றிலும் சரியே மேலும் இவர்கள் மார்க்கத்தை அறியாதது மட்டுமல்ல அறியவில்லை என்பதைக்கூட அறியாத மூடர்கள் கூட்டம்

masha allah pls broke all ZIYARAM in srilanka

masha allah pls broke all ZIYARAM in srilanka

Before broke the ziyaram or after you ll be a mental insha Allah ll see soon as possible.
Do not play with believes of Allah bcz Allah ll flight with you
Do not take a dream u can broke the ziyaram easily ll see sure who r the person did this terrorism job insha Allah soon ll b in custody.

இஸ்லாத்துக்கு விரோதமான இந்த கபுருகள் உடைக்கப்படனும் என்ற வாதத்துக்கு எதிராக பேசுபவர்கள் அல்லாஹ்வுக்கும்,அல்லாஹ்வின் ரசூலுக்கும் எதிரானவர்கள் அல்லாஹ் இவர்கள் அணைவருக்கும் தூய இஸ்லாமிய வழியை காட்டுவானாக, ரிஸ்க்(மனிதனின் தேவைகளை) தருபவன் அல்லாஹ்(கடவுள்)என்று எல்லா இனத்தவர்களும் ஏற்றுக்கொள்வர்கள் ஆனாலும் இணை கற்பிப்பார்கள்!

demolish not only all kabr but all bladies who pray kabr also.

இயக்க வெறி பிடித்த இந்த முட்டாள்கள் எம்மை ஓர் வரலாறு அற்ற சமூகமாக மாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.வரலாறு இல்லாத சமூகம் எங்கும் இரண்டாம் தர பிரஜையாகவே கருதப் படுவார்கள். ஐநூறு அறுநூறு வருடங்கள் பழமை வாய்ந்த எமது வரலாறு கூறும் பள்ளிவாசல்களெல்லாம் திருத்தம் என்ற பெயரில் உடைக்கப்பட்டு வரலாறுகள் அழிக்கப் பட்டுகொண்டிருக்கிறது. இது எமது சமூகத்தின் இருப்பை கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக்கிறது என்பதை இந்த இயக்க வெறியர்கள் எப்போதுதான் புரிந்து கொள்வார்களோ? அண்மையில் எமது பாடசாலையில் தொல்பொருள் திணைக்களத்தினால் மாணவர்களுக்கு ஒர் கருத்தரங்கு நடைபெற்றது.அதில் பேசிய தொல்பொருள் திணைக்கள தமிழ் சகோதர அதிகாரி கூறினார் " பழமை வாய்ந்த இந்துக் கோவில்கள் பௌத்த விகாரைகளெல்லாம் வரலாறுக்காக பாதுக்கப் பட்டு வரும் அதே வேளையில் உங்கள் பழமை வாய்ந்த பள்ளிவாசல்களெல்லாம் முழுமையாக உடைத்து கட்டப் படுவதால் உங்கள் வரலாறு அழிக்கப் படுகிறது" என்று கூரிய போது எனக்கு மிகவும் கவலையாக இருந்தது.

Mr. Mohamed Yoosuf, I strongly agree with your views.

சரியாக ஒரு வசனம் எழுதத் தெரியாத - ஒழுங்காக ஒரு சொல் பேசத் தெரியாத - விரிவாகச் சிந்திக்கத் தெரியாத 'மேதாவிகள்' அதிகரித்துவிட்டதன் விளைவே இது. தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரன் என்ற நிலைமை சமூகத்தில் கூடிக்கொண்டே செல்கின்றது. இப்படியான 'மேதாவிகள்'' மற்றைய சமூகங்களில் காணப்படாதபடியால் அவர்கள் எங்கோ சென்றுகொண்டிருக்கின்றார்கள். எமது செயல்கள் மூலம் நாங்கள் அற்பர்களாகவும்¸ அறிவிலிகளாகவும் அவர்கள் முன் தோற்றுகின்ற நிலைமை தொடர்கின்றது. அறிவு பூர்வமாகச் சிந்தித்து முன்னேறப் பாருங்கள். சிந்திக்க வேண்டிய - செயற்பட வேண்டிய விடயங்கள் வேறு எங்கோ இருக்க 'அதை உடை¸ இதை உடை' என்று வீணாக உணர்ச்சிவசப்பட்டு போலிக் கூப்பாடு போடுவதில் காலம் கழிக்க வேண்டாம். வரலாறு என்பது பேணப்பட வேண்டிய ஒன்று. இது உறுதியான உண்மை. - இதற்கு சின்னங்கள் அவசியம். மூட நம்பிக்கைகள்¸ பழக்கவழக்கங்கள் களையப்பட வேண்டிய ஒன்று என்பதில் மாற்றுக் கருத்து இல்லை - அதற்கு அறிவியல் ரீதியான புரட்சியை ஏற்பாடு செய்தல் அவசியம் என்பதை உணருங்கள். (இப்போது இக் கூற்றை வெட்டிப் பேச 'ஆழ்ந்த அறிவும் தூர நோக்குமுள்ள எந்த மேதாவி' ஆயத்தமாகின்றாரோ தெரியாது) வாழ்க சமூகம்!

This is only for Muslims who obey Allah and Rashool.. and not takooth and their own desires.
==================================================
The evidence of sharee’ah indicates that it is obligatory to destroy idols, for example:

1 – Muslim (969)
Narrated that Abu’l-Hayaaj al-Asadi said: ‘Ali ibn Abi Taalib said to me: “Shall I not send you with the same instructions as the Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) sent me? ‘Do not leave any image without defacing it or any built-up grave without leveling it.’”

2 – Muslim (832)
Narrated from ‘Urwah ibn ‘Abasah that he said to the Prophet (peace and blessings of Allaah be upon him): “With what were you sent?” He said, “I was sent to uphold the ties of kinship, to break the idols, and so that Allaah would be worshipped alone with no partner or associate.”

The obligation to destroy them is even stronger if they are worshipped instead of Allaah.

ஸியாரத்தை வைத்து கொண்டு இஸ்லாத்தை பாத்து காக்க வேண்டும் என்ற தேவை பாடு உள்ளவர்கள் சிலை வணங்கிகள்

இப்படி பட ஸியாரத்தை உடைத்தவர்கள் நல்லதே செய்தார்கள் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும்

There is nothing called Ziyaram. Ziyarah means visit.
Because of the grave worshipers visited the graves of who dead had started to call the grave as ziyaram. All those graves should be leveled and this is the duty of a true Muslim. Anyone out there to oppose it?

சிங்கள பலசோனா அழிக்க வருகுதுண்டு பயம் காட்டி புதிய கபர் முட்டி பலசேனாக்கள் முஸ்லீம்களை இஸ்லாத்தில் இருந்தே இணைவைக்க வழிகாட்டுது சரி இந்த சியாறம் கப்று வணக்கம் எல்லாம் எப்ப வாப்பா இஸ்லாத்தில் வந்தது கிட்டத்தட்ட 200க் கும் நாநூறுக்கும் இடைப்பட்ட காலம் அதுக்கு முன்னர் ஆயிரம் ஆண்டுகளாக முஸ்லும்கள் இலங்கையில் வாழ்ந்தாக வரலாறு இருக்கும் போது இணைவைப்பதை தூண்டும் இந்த பாவத்துக்கு வக்காலத்து வேற இருநூறு வரட எதனுடனும் பொருந்தாத இணைவைப்பைத் தூணடும் மண் குவியலை விட ஓரிறைக் கொள்ளை முஸ்லீம்களுக்கு முக்கியம்

ஜிப்ரிஐயா கபுருகள ஸியாரத் செய்யும் அது உங்களுக்கு மறுமையை ஞாபகம் செய்யும் என்று நபிகளார் எப்போ சொன்னாங்களோ அப்பவே கப்ரு ஸியாரம் வந்தாச்சு அது சரி உங்க வஹாபிஸம் எப்போ வந்தது என்று கொஞ்சம் தேடிப் பார்க வில்லையா?உங்க வஹாபிய மார்கம் எப்போ வந்தது ஏன் வந்தது என்ற சரித்திரம் உங்களுக்கு தெரியாவிட்டால் சவூதி மன்னர் முஹ‌ம்ம‌து பின் ஸல்மான் சமீபத்தில் முழு விவரங்களையும் பகிரங்கமாக வெளியிட்டார் தேடி தெரிந்து கொள்ளவும் யூதர்களின் நேரடி வாரிசுகளான நீங்கள் மக்கா மற்றும் மதீனாவில் நபிகளாரினதும் அவர்கள் தோழர்களினதும் நினைவிடங்கள் அனைத்தையும் இடித்து தரைமட்டமாக்கி விட்டு உங்க பாட்டன் வழிகளான யூதர்களின் நினைவிடங்களை பாதுகாப்பாக வைத்திருக்கிறீர்களே அதே வேலையையா இங்கும் செய்ய முயற்சிக்கிரீர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் பரம்பரை குணம் வரத்தானே செய்யும்

மக்கா என்பது வேறு.....................
மதினா என்பது வேறு.....................
நஜ்த் (சவூதியின் தலைநகர் - ரியாத்) என்பது வேறு............

நபிகள் நாயகம் ஸஹாபாக்களின் மத்தியிலிருந்து துஆ செய்தார்கள் :-

#அல்லாஹூம்ம_பாரிக்லனா_பீ_ஷாமினா

இறைவா எங்களுடைய ஷாம் நாட்டுக்கு பரக்கத் புரிவாயாக
ஷாம் என்றால் இன்றைய சிரியா நாடு.

#அல்லாஹூம்ம_பாரிக்லனா_பீ_எமனினா

யா அல்லாஹ் எங்களுடைய எமன் நாட்டுக்கு பரக்கத் செய்வாயாக
எமன் நாடு இன்றும் எமன் என்றே அழைக்கப்படுகிறது.

இந்த நேரத்தில் சஹாபாக்களில் சிலர் கேட்டார்கள்#வfபீ_நஜ்தினா யாரஸூலல்லாஹ்
எங்களுடைய நஜ்து நாட்டுக்கும் துஆ செய்யுங்கள்.
நஜ்த் என்பது இன்றைய சவூதியின் தலைநகர் ரியாத்

ஆனால் நபியவர்களோ மீண்டும் ஷாமுக்கும் எமனுக்கும் துஆ செய்தார்கள். நஜ்துக்கு துஆ செய்யவில்லை

#வபீநஜ்தினா என மீண்டும் ஸஹாபாக்கள் கேட்க நபியவர்கள் மீண்டும் ஷாமுக்கும் எமனுக்குமே துஆ செய்தார்கள்.

நஜ்துக்கு துஆ செய்ய மூன்று முறையும் மறுத்து விட்டார்கள்.

பின்பு நபிகளார் கூறினார்கள் #வபீஹா_யத்லூ_கர்ணு_ஷைத்தான். அங்குதான் ஷைத்தானுடைய கொம்பு முளைக்கும்.என்றார்கள்.

அன்றைய நஜ்திலே தான் வஹாபிஸத்தை தோற்றுவித்த இப்னு அப்துல் வஹாப் ஹிஜ்ரி 1115 ல் பிறந்தான்.
சிந்தித்துப் பாருங்கள்.

நபிகள் நாயகம் அன்று எந்த நாடுகளுக்கு துஆ செய்தார்களோ அந்த சிரியா எமன் நாடுகள் இன்று ஸூன்னத் வல் ஜமாத் நாடுகளாக இருக்கின்றன. அங்கு தரீக்காக்கள் தர்ஹாக்கள் உண்டு.

இப்னு அப்துல் வஹாபின் சீடனான சவூதினால் கைப்பற்றப்பட்ட நபியவர்கள் துஆ செய்ய மறுத்த ரியாத் அமைந்துள்ள அரேபியா இன்று வஹாபிஸ நாடாக இருந்து கொண்டிருக்கிறது.

உலகம் முழுக்கவும் ஸுன்னத் ஜமாத் உண்டு. உலகில் சுன்னத் ஜமாத் 83 வீதமும் ஷியாக்கள் 9 வீதமும் இஹ்வான்கள் 7வீதமும் வெறுமனே வஹாபிகள் 1 வீதமும் இருக்கிறார்கள்.

அரபு நாடுகள் முழுக்க தர்ஹாக்கள் உண்டு. சவூதியிலே கூட நபிகளாரினதும் ஸஹாபாக்களினதும் தர்ஹா மஸ்ஜிதுன் நபவியிலே உண்டு.

பலஸ்தீனிலே மஸ்ஜிதுல் அக்ஸாவை சூழ நபிமார்கள் தர்கா உண்டு
ஈராக்கிலே பக்தாதிலே முகைதீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் தர்ஹா உண்டு

ஆக இலங்கை இந்தியா பங்களாதேஷில்தான் தர்ஹாக்கள் தரீக்காக்கள் உண்டு என்பது வஹாபிகளின் பொய்யான வாதமாகும்.

Ziyarata udaika sonnadhu allah udaya rasool...
Adha pila endu solradhuku neega yaaru jaffna muslim?????
Allhvukkum awanda rasoolkum kattupaduga....

Abthul Kaneem Musthafa உங்களுக்கு அல்லாஹ் நல்லறிவை வழங்குவானாக? சியாரங்களை உயர்த்த வேண்டாம், உயர்த்தியவைகளை உடைக்குமாறு சொல்லிய இஸ்லாத்த புரியாத நீங்கள் விளக்கம் வேறு எழுதி வழிகெடுக்கும் வேளையிலும் ஈடுபட்டிருக்கிறீர்கள்., குர்ஆன் ஹதீஸ் பேசுபவர்களே! உங்களுக்குள் சண்டையில் ஈடுபட்டு காலத்தை வீணாக்காது இந்த Abthul Kaneem Musthafa போன்றவர்களின் நச்சுக்கருத்துகளுக்கு எதிராக களம் இறங்குங்கள் அல்லாஹ்வின் தண்டனையில் இருந்து மக்களை பாதுகாப்போம்.

Siyaram are whole mark of existence.This the proof that Muslims lived here before thousand of years.So there is conspiracy to destroy our historical site to deny our existence.That is what BBS did in Kooragala and Anuradhapura.That is what that so called original Islam group want to do.

Now their masters true color is emerging and their sinister anti Islamic pro Israeli nature is exposed.These people talk about the simplicity of burial after death, but not talk about their luxury westernize life of before death.

Post a Comment