Header Ads



பாக்கிஸ்தான் அணி கெப்டன், வைத்தியசாலையில் அனுமதி


அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரின் பந்தினால் தாக்கப்பட்ட பாக்கிஸ்தான் அணியின் தலைவர் சவ்ராஸ் அகமட் பரிசோதனைகளிற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

துபாயில் இடம்பெறும் இரண்டாவது டெஸ்டில் பாக்கிஸ்தானின் இரண்டாவது இனிங்சில் வேகப்பந்து வீச்சாளர் பீட்டர் சிடிலின் பந்து சவ்ராஸ் அகமட்டின் இடது காதை தாக்கியது.

தலையை நோக்கி வந்த பவுன்சர் பந்தினை  தவிர்ப்பதற்காக குனிந்தவேளை பந்து சவ்ராசின்  இடதுகாதை பந்து தாக்கியுள்ளது.

அதனை தொடர்ந்து சிகி;ச்சை எடுத்துக்கொண்ட அவர் தொடர்ந்து 32 ஓவர்கள் துடுப்பெடுத்தாடினார்.

எனினும் இன்று காலை  தலைவலிகாரணமாக பாதிக்கப்பட்ட அவர் இன்று விளையாடவில்லை.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சப்பிராஸ் அகமட்டிற்கு பதில் முகமட் ரிஸ்வான் விக்கெட் காப்பாளர் பொறுப்பையேற்றுள்ளார்

No comments

Powered by Blogger.